கர்ப்பிணி பெண்ணை அடித்து கொடுமை செய்த மாதம்பட்டி ரங்கராஜ்- 2ஆவது மனைவியால் எழுந்த பரபரப்பு
மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, கர்ப்பமாக்கி விட்டதாகவும், கருகலைப்பு செய்ய தூண்டியதாகவும் மாதம்பட்டி ரங்கராஜுன் இரண்டாவது மனைவி பொலிஸ் புகார் கொடுத்துள்ளார்.
மாதம்பட்டி ரங்கராஜ்
பிரதமர் முதல் தமிழ் சினிமா பிரபலங்கள் வரை அறியப்பட்டவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். தமிழ்நாட்டின் ஃபேமஸ் சமையல் கலைஞராக வலம் வரும் இவர், பலருக்கு சமைத்து போட்டுக் கொண்டிருக்கிறார்.
சினிமா பிரபலங்கள் வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் சமையல் கலையில் அசத்துபவர் தான் மாதம்பட்டி ரங்கராஜ். அந்த அளவுக்கு அவர்களுக்கு பரிச்சயமானவராக இருக்கிறார்.
இவர், சமையல் கலைஞர் மட்டுமல்லாது “மெஹந்தி சர்க்கஸ்” என்ற படத்தின் மூலம் கதாநாயகராக நடித்துள்ளார். குக்கூ படத்தின் இயக்குநரான ராஜுமுருகனின் சகோதரர் இயக்கியிருந்த இந்த படம் வணிக ரீதியாக வரவேற்பை பெறவில்லை.
இதற்கிடையே ஸ்ருதி என்பவரை மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்துவிட்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
பொலிஸ் புகார்
இந்த விவாகரத்திற்கு மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு எந்தவித பதிலும் கொடுக்காமல் இருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய முதல் மனைவியுடன் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து கடுப்பான ஜாய் கிரிஸில்டா, “ சென்னையில் உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ், 7 மாதம் கர்ப்பமாக்கி விட்டு, ஏமாற்றி விட்டார். என்னுடைய குழந்தைக்கு அவர் தான் அப்பா. அவர் என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். நான் அவரை ஒரு வாரங்களுக்கு முன்னர் பார்த்தேன், அவர் என்னை அடித்தார், அனைவரும் பார்த்து கொண்டிருந்தார்கள். அவருக்கும் எனக்கும் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது, குழந்தையை கருகலைப்பு செய்யுமாறு கூறினார்..” என காவல் ஆணையரகம் புகார் கொடுத்துள்ளதுடன், முன்னாள் இருந்த ஊடகங்களுக்கும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு ரங்கராஜ் தரப்பினர் என்ன விளக்கம் கொடுப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
