தலைமுடி எலிவால் போல இருக்கா? அப்போ முட்டையுடன் இதை சேர்த்து போடுங்க
நம்மிள் பலருக்கும் இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு. தலைமுடி உதிர்வு தானே என யதார்த்தமாக இருந்து விட்டால் நாளடைவில் தலைமுடி அனைத்தும் உதிர்ந்து வழுக்கையாக மாறி விடும்.
இதற்கு தீர்வு கொடுக்க நினைப்பவர்கள் முதலில் தலைமுடி உதிர்வுக்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். தலைமுடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
உதாரணமாக, மன அழுத்தம், மரபணுக்கள், போதுமான ஊட்டச்சத்து இல்லாமை, தலைமுடி ஸ்டைலிங் பொருட்கள் பயன்பாடு போன்ற பல உள்ளன.
இது தலைமுடி உதிர்வை அதிகமாக்கி எலிவால் போன்று மாற்றி விடும். நிறைய பணம் செலவழித்து சிகிச்சை கொடுப்பதற்கு பதிலாக வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு வைத்தியம் செய்தால் தலைமுடி உதிர்வுக்கு நிரந்தர தீர்வை பெறலாம்.
அந்த வகையில், தலைமுடி பராமரிப்புக்கு உதவியாக இருக்கும் முட்டையுடன் என்னென்ன பொருட்களை சேர்த்து பேக்காக போட்டால் தலைமுடி பழைய நிலைக்கு திரும்பும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. முட்டை +ஆலிவ் ஆயில்
முட்டை மற்றும் ஆலிவ் ஆயில் இரண்டையும் ஒரு பௌலில் ஊற்றி, அதனை நன்றாக கலந்து கொள்ளவும்.
அதன் பின்னர், தலையில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைக்கவும்.
நன்றாக காய்ந்தவுடன் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் தலைமுடி நன்றாக கழுவ வேண்டும்.
இந்த பேக்கை வாரம் ஒரு முறை போட்டு வந்தால் தலைமுடி உதிர்வு குறைந்து தலைமுடி வளர்ச்சியடையும்.
2. முட்டை + தயிர் பேக்
முட்டை, தயிர் இரண்டையும் ஒரு பௌலில் போட்டு நன்றாக கலந்து விடவும்.
அதன் பின்னர் தலைக்கு தடவி சரியாக 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
அடுத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை நன்றாக கழுவ வேண்டும்.
சரியாக கழுவாமல் இருந்தால் தலைமுடியில் இருந்து துர்நாற்றம் வர ஆரம்பிக்கும்.
இந்த பேக் போடும் போடும் தலைமுடி வலிமையாக்கப்படும். அத்துடன் தலைமுடியை பட்டுப்போன்று மென்மையாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
