தலைமுடிக்கு கராம்பை இப்படி பயன்படுத்துங்க - முடி தாறுமாறாக வளரும்
தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர வேண்டும் என்ற ஆசை இருந்தால் 100 கிராம் கராம்பை இப்படி பயன்படுத்தி பாருங்க நல்ல பெறுபேறு கிடைக்கும்.
தலைமுடி உதிர்விற்கு கராம்பு
தலைமுடி உதிர்வு தலைமுடி வளர்ச்சியின்மை போன்ற பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் கராம்பு ஒன்றே போதும். ஆனால் பலரும் பல கெமிக்கல் பொருட்களை வாங்கி தலைக்கு பயன்படுத்துகிறார்கள்.
இது ஒரு சில நேரத்திற்கு மட்டுமே நல்ல பெறுபேற்றை கொடுக்கும். நாட்கள் கடந்து செல்ல செல்ல இது தலைமுடிக்கு சேதத்தை ஏற்படுத்தும்.
இதனால் தலைமுடி வறட்சி, உதிர்வு, பளபளப்பின்மை போன்றவற்றை ஏற்படும். இதற்கு பல தீர்வுகள் இருந்தாலும் எல்லோருக்கும் எல்லாம் சரி வருவதில்லை.
ஆனால் கராம்பு ஒரு இயற்கை பொருள் என்பதால் அது நல்ல பெறுபேற்றை தருவதுடன் தலை முடி வளர்ச்சியையும் தூக்கி கொடுக்கும். இப்போது இந்த கராம்பை தலைமுடிக்கு பயன்படுத்தும் முறை பற்றி பார்க்கலாம்.
கராம்பு பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் 100 கிராம் கராம்பை போட்டு இரண்டு டம்லர் தண்ணீரை அதில் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
இரண்டு டம்லர் தண்ணீர் ஒரு டம்லர் ஆக வற்றும் வரை அதை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் அதை ஸ்ப்ரே போத்தலில் ஊற்றி வைக்க வேண்டும் இதை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
இதை ஒவ்வொரு முறை குளிக்க முன்னரும் தலையில் ஸ்பே்ரே செய்து நன்றாக மசாஜ் செய்து பின்னர் குளித்தால் தலை முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரியும்.
தலைமுடி உதிர்வு மூன்று வாரங்களில் முற்றாக கட்டுப்படும். தலைமடி பார்ப்பதற்கு பளபளப்பை கொடுக்கும். இதை செய்து பாருங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
