Siragadikka Aasai: காதலுக்கு சம்மதம் வாங்கிய முத்து! ஒருவழியாக காப்பாற்றப்பட்ட மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் காதல் பிரச்சனையால் விஜயாவிற்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில், அவரைக் காப்பாற்ற முத்து மீனா இருவரும் சமாதானம் பேசி கடைசியில் வெற்றியும் பெற்றுள்ளனர்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ள நிலையில், கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதையை மக்களும் விரும்பி அவதானித்து வருகின்றனர்.
விஜயா நடத்திவரும் நடன பள்ளியில் படித்த காதல் ஜோடி ஒன்று தற்போது வசமாக சிக்கியுள்ளது. இதனால் விஜயாவிற்கும், பள்ளிக்கும் பிரச்சனை ஏற்பட்டது.
உடனே மீனா முத்து இதனை சரிசெய்வதற்கு முயற்சி செய்து ஒருவழியாக இரு தரப்பினரிடமும் திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளனர்.
பின்பு சிக்கலில் மாட்டிக்கொண்ட மனோஜையும், ரோகினியையும் காப்பாற்றி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
