உலக சாம்பியனை தோற்கடித்த 16 வயது சிறுவனுக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து
செஸ் போட்டியில் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்னை தோற்கடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி ஆனது ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் 16 வீரர்கள் பங்கேற்றனர். இதில், எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.
இவர் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 39-வது நகர்த்தலின் போது வெற்றியை வசமாக்கினார். அதன்படி தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்த பிரக்ஞானந்தா, மொத்தம் 8 புள்ளிகளுடன் 12ஆவது இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டர் வாயிலாக தெரிவித்த வாழ்த்தில், “என்ன ஒர் அற்புதமான உணர்வு. அனுபவம் வாய்ந்த, உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை கறுப்பு காய்களுடன் விளையாடி தோற்கடித்தது மாயாஜாலம்.
நீங்கள் மேன்மேலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள். இந்தியாவுக்கு நீங்கள் பெருமை சேர்த்திருக்கிறீர்கள்” என பதிவிட்டுள்ளார்.
What a wonderful feeling it must be for Pragg. All of 16, and to have beaten the experienced & decorated Magnus Carlsen, and that too while playing black, is magical!
— Sachin Tendulkar (@sachin_rt) February 21, 2022
Best wishes on a long & successful chess career ahead. You’ve made India proud! pic.twitter.com/hTQiwznJvX