CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த பரிசை பாருங்க... படு வைரலாகும் புகைப்படம்
விஜய் முதல்வராக பதவியேற்றத்தில் இருந்தே சினிமா துறையினர் பலரும் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு முதல்வர் விஜயை சந்தித்து கொடுத்துள்ள பரிசு இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முதல்வர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வந்த நடிகர் விஜய் 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தன் மூலம் அரசியலில் களம் கட்சியை ஆரம்பித்து வெறும் இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் 233 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றியீட்டி மாபெரும் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நடிகராக உச்ச சம்பளத்தில் முன்னிலையில் இருந்த விஜய் தற்போது தமிழக முதல்லவராக அரசியலிலும் உச்சம் தொட்டுள்ளார்.

வெங்கட் பிரபு பரிசு
விஜய் முதல்வராக பதவியேற்றதை தொடர்ந்து, கோட் (GOAT - The Greatest Of All Time) திரைப்படத்தில் விஜய் பயன்படுத்திய காரின் பதிவு எண் TN 07 CM 2026 இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததுடன், GOAT படத்தில் விஜய் பயன்படுத்தும் கார் நம்பரில் CM 2026 என குறிப்பிடப்பட்டு இருக்கும். அதையே விஜய்க்கு பரிசாக கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |