ராகு கேது பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தை வெள்ளப்போகும் ராசிகள்.. உங்க ராசி இதுல இருக்கா?
ராகு கேது பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்கு அதிர்ஷ்டம் என்று இந்த பதிவில் காணலாம்.
ராகு மற்றும் கேது
ஜோதிடத்தில் ராகு, கேது இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்களாக அறியப்படும் நிலையில், இவற்றின் திடீர் மாற்றங்கள் பெரும்பாலான நேரங்களில் அசுப பலன்களை தருவதாகவே கூறப்படுகின்றது.
ஆனால் சில தருணங்களில் சுப பலன்களையும் கொடுக்கின்றது. அந்த வகையில் வரும் 29ம் தேதி கேது மக நட்சத்தரத்திலும், ராகு சதய நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலும் சஞ்சரிக்க உள்ளது.

இதன் காரணமாக சுப பலன்களைப் பெறும் நான்கு ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மேஷம்
இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷ ராசிக்கு நிறைய பலன்கள் கிடைக்கும். இந்த காலத்தில் இவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கேட்பார்கள். இதனால் இவர்கள் நம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். இவர்கள் மட்டுமின்றி இவர்கள் தோழியின் முன்னேற்றத்தையும் காண்பார்கள். நீங்கள் வேலை பார்ப்பவர்களின் கீழ் நல்ல பலனை பெறுவார்கள். உங்கள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அரசு வேலைக்கு காத்திருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு புதிய வாகணம் ஒன்று வாங்கும் வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் சீக்கிரம் வந்து சேரும். நீங்கள் வேலை பார்க்கும் தொழிலில் புதிய மாற்றத்தை காண்பீர்கள். உங்கள் வருமணம் உயரும். அது மட்டுமின்றி உங்கள் அதிகாரியிடமிருந்து பாராட்டு பெறுவீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்களிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இது ஒரு மங்களகரமான காலமாக இருக்கும். இந்த காலத்தில் நீங்கள் விரும்பிய பொருளை வாங்குவீர்கள். நீங்கள் நீண்ட காலம் முடிக்காமல் வைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நீங்கள் நேர்மையான மாற்றத்தை பெறுவீர்கள். புதிய வேலைகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் தன்னம்பிக்கை அதிகமாகும். குடும்பத்தில் நிறைய நல்ல காரியம் நடக்க வாய்ப்பு உள்ளது.

துலாம்
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சந்தோஷம் நிறைந்திருக்கும். உங்கள் ஆசைகள் நிறைவேறும் காலமாக இது இருக்கும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு மரியாதை அதிகரிக்கும். நீங்கள் செய்த உழைப்பிற்கு தக்க பாராட்டை பெறுவீர்கள். உங்கள் வீட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். நீங்கள் தொடங்கும் காரியம் அதிர்ஷ்டமாக மாறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |