வீட்டிற்கு பணத்தை ஈர்க்கும் அதிர்ஷ்ட தாவரங்கள் - உங்கள் வீட்டிலும் இருக்கா?
ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒவ்வொரு விதமான சக்தி உள்ளது, அந்த சக்தியை அறிந்து தாவரம் வளர்ப்பது மிகவும் முக்கியம்.
நீங்கள் வீட்டில் செல்வத்தையும் மகிழ்ச்சியையும் ஈர்க்க விரும்பினால் சில தாவரங்களை வளர்ப்பது நல்லது.
இப்படி வளர்ப்பதால் எதிர்காலத்தில் வரவிருக்கும் துரதிஷ்டவசமான செயல்களை தவிர்த்து நடந்துகொள்ள முடியும்.
இதை வீட்டில் மட்டுமல்ல அலுவலகத்திலும் வைத்து கொள்ளலாம்.
பாம்பு செடி
பாம்பு செடி பாதுகாப்பிற்காகவும் அதிர்ஷ்டத்திற்காவும் பயன்படுத்துகிறார்கள்.
வீட்டிற்கு வரும் எதிர்மறையான சக்திகளை தடுத்து நல்ல விடயங்களை மட்டும் இந்த செடி உள்ளிழுக்குமாம்.
இதற்காக தான் இந்த செடியை செல்வத்தை ஈர்க்கும் அதிர்ஷ்ட செடி என கூறுகிறார்கள்.
இது உயரமாக வளரக்கூடியது. இதனை நாம் வீட்டு சுற்றுப்புற சூழலில் அடிக்கடி பார்த்திருப்போம். ஆனால் இதன் பயனறியாது அப்படியே விட்டிருக்கலாம்.
இதை அலட்சியம் செய்யாமல் நமக்கு செல்வம் தரும் இடங்களில் வளர்த்தால் அதிக நன்மை கிடைக்கும்.
அதிர்ஷ்ட மூங்கில் செடி
இந்த செடியை வீட்டிற்குள்ளும் வெளியிலும் வளர்க்கலாம். வளர்க்க பராமரிக்க எளிதான தாவரம் இது.
இந்த செடியை நாம் வீட்டில் வைத்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.
இது வீட்டில் இருந்தால் சண்டை சச்சரவுகள் மற்றும் உறவுகளுக்குள்ளான பிரச்சனைகள் எதுவும் இருக்காது. இது தவிர வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் இருக்காது. இதனால் தான் இதனை அதிர்ஷ்ட செடி என கூறுகிறார்கள்.
பிட்டோனியா செடி
பிட்டோனியா எனப்படும் செடி வீட்டிற்கு செல்வத்தை இழுக்கும் ஒரு அற்புத செடி என கூறுகிறார்கள்.
இந்த செடி வீட்டில் இருந்தால் பணம் சம்பாதிப்பதற்கான பாதைகள் நிறைய பிறக்குமாம்.
இந்த செடியில் உள்ள இலைகளின் இளஞ்சிவப்பு பச்சை என கலந்த நிறங்கள் மனதிற்கு ஒரு விதமான மகிழ்ச்சியை தருகின்றது.
வீட்டில் நல்ல எண்ணங்களை தூண்டுவதில் இந்த செடிக்கு அதிக பங்கு உண்டு.
இந்த செடி வளர்த்தால் வீட்டில் செல்வத்திற்கான பஞ்சம் இருக்காது என முன்னோர்களால் கூறப்படுகறது.
ஜெட் செடி
இந்த ஜெட் செடி சந்தைகளில் அதிக அளவில் விற்பனையாகும். பல பணக்கார வீடுகளில் இந்த செடியை வைத்திருப்பார்கள்.
இந்த செடிக்கு எல்லா வகையிலான அதிர்ஷ்டத்தையும் ஈர்க்கும் சக்தி உள்ளது.
இதனால் தான் இந்த செடியை ”நல்ல அதிர்ஷ்ட ஜெட்” என கூறுகிறார்கள்.
இதை வாஸ்து பார்த்து வீட்டில் வைத்தால் பணத்திற்கு எந்த கஷ்டமும் இருக்காது என கூறப்படுகின்றது.
இது பார்க்க வட்டமான இலை அமைப்பை கொண்டிருக்கும். குறைந்த சூரிய ஒளி தான் தேவைப்படும்.
இதை சிறு பூச்சட்டியில் வைத்து கூட பராமரிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
