ஹீமோகுளோபின் குறைவுக்கு வீட்டிலேயே தீர்வு- இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க
உடலில் வழக்கத்தை விட ஹீமோகுளோபின் அளவுகள் குறைந்து விட்டால் அதனை தான் இரத்த சோகை என்கிறோம்.
இந்த நோய், குறுகிய கால மற்றும் நீண்ட கால உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
“ஹீமோகுளோபின்” என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள ஒரு புரதமாகும், இது ஒருவரின் உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்ல உதவியாக இருக்கிறது.
இதன் அளவில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது உடலுக்கு போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.
அந்த வகையில், ஹீமோகுளோபின் குறைபாடு பற்றிய மேலதிக தகவல்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
குறுகிய கால பிரச்சினைகள்
1. எந்த காரணமும் இல்லாமல் உடல் பலவீனமாகவும் சோர்வாகவும் இருக்கும். இந்த அறிகுறி இருந்தால் உங்களுக்கு குறைந்த ஹீமோகுளோபின் பிரச்சினை இருக்கலாம். இதனால் உங்களின் நாளாந்த வேலைகளை செய்வது கடினமாக இருக்கும்.
2. தினமும் நீங்கள் செய்யும் லேசான செயல்பாடு கூட உங்களை மூச்சுத் திணறச் செய்யும்.
3. இரத்த ஓட்டம் குறையும் பொழுது சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும். இதனால் உங்களின் நிறம் வழக்கத்திற்கு மாறாக வெளிர் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதனால் வெள்ளையாக மாறுகிறீர்கள் என்று அர்த்தம் ஆகாது.
4. ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வது குறைவாக இருக்கும். இதனால் உங்களுக்கு தலைவலி மற்றும் தலைசுற்றல் பிரச்சினைகள் அதிகமாக வரலாம்.
5. ரத்த சுழற்சி உடலில் குறைவாக இருப்பதால் உங்களின் கை-கால்கள் வழக்கத்திற்கு மாறாக குளிர்ச்சியாக இருக்கும். இதனால் நீங்கள் எப்போதும் ஜில்லென்ற உணர்வுடன் இருப்பீர்கள்.
6. நெஞ்சுவலி அல்லது ஒழுங்கற்ற இதயத் துடிப்பு (படபடப்புடன் உணர்தல்) இருக்கும்.
நீண்ட கால அறிகுறிகள்
1. ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை பம்ப் செய்ய இதயம் உழைக்கிறது, இது காலப்போக்கில் இதயம் பெரிதாகுதல் அல்லது இதய செயலிழக்க வாய்ப்பு உள்ளது.
2. பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும் பொழுது குறைப்பிரசவம், குழந்தை எடை குறைந்து பிறத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படும். பிரசவத்திற்குப் பிறகு மனச்சோர்வு ஏற்படும்.
3. குறைந்த ஹீமோகுளோபின் பிரச்சினைகளை கண்டுக் கொள்ளாமல் இருக்கும் பொழுது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக மாறும். இதன் விளைவாக அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற தொற்றுகள் ஏற்படும்.
4. குழந்தைகளுக்கு ஹீமோகுளோபின் அளவு குறையும் சமயத்தில் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் கற்றல் திறன் குறைவாக இருக்கும்.
5. நீண்ட கால ஆக்ஸிஜன் பற்றாக்குறை நினைவாற்றலை பாதிக்கும். இதனால் உங்களுக்கு நினைவுத்திறன் பாதித்தல், கவனச்சிதறல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
6. ஆக்ஸிஜன் செல்வது குறைவாக இருப்பவர்களுக்கு இரத்த சோகை நோயாளிகள் மருத்துவ நடைமுறைகளின் போது அதிக ஆபத்து ஏற்படும். அறுவை சிகிச்சைகள் கூட செய்ய முடியாத நிலை இருக்கும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள்
- கீரை, பேரிச்சம்பழம், கருப்பு உலர் திராட்சை, வெல்லம், கடலை உள்ளிட்ட இரும்புச்சத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட வேண்டும்.
- டீ-காஃபி குடிப்பதை நிறுத்திவிட்டு பழச்சாறுகளை அடிக்கடி வாங்கி குடிக்கலாம்.
- ஆரஞ்சு, நெல்லிக்காய், கொய்யா ஆகிய பழங்களை அடிக்கடி எடுத்து கொள்வது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |