காதலித்து கரம்பிடித்த ஐஸ்வர்யா- தனுஷ்! வயதில் அதிகமான பெண்ணை கல்யாணம் செய்தது எப்படி?
18 ஆண்டு கால திருமண வாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் தனுஷ்- ஐஸ்வர்யா தம்பதியினர்.
இவர்களது விவாகரத்து பரபரப்பை கிளப்பிய நிலையில், ஏன் என்ன காரணம்? மீண்டும் இருவரும் இ்ணையமாட்டார்களா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
இந்த பதிவில் இருவருக்கும் காதல் மலர்ந்தது எப்படி? என தெரிந்து கொள்ளலாம்.
தொடக்கத்தில், இருவரும் நண்பர்களாக பழகி வந்துள்ளனர், உண்மையில் ஐஸ்வர்யாவும், தனுஷின் சகோதரியும் நெருங்கிய தோழிகள்.
ஆரம்பத்தில் காதல் என கிசுகிசுக்கள் வந்தாலும் தனுஷ் மறுப்பு தெரிவித்தார், ஆனால் கடைசியில் காதல் என உறுதியானது.
ரஜினி மற்றும் கஸ்தூரி ராஜா என இருவரும் திரையுலகில் பெரும் புள்ளிகள் என்பதால், காதல் விவகாரத்தை சுமூகமாக பேசி முடித்தனர்.
பிறகு, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் ஒன்றாக பேசி தங்கள் திருமண வாழ்க்கை குறித்து முடிவெடுத்தனர்.
இவர்கள் இடையே வயது வித்தியாசம் இருந்தாலும், அதை பெரிய பிரச்சனையாக காணாது, தன்னை விட வயது மூத்தவரான ஐஸ்வர்யா ரஜினியை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் தனுஷ்.
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திருமணம் பாரம்பரிய முறையில், 2004ம் ஆண்டு நவம்பர் மாதம் 18ம் தேதி நடைப்பெற்றது.
இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் உள்ளனர், திருமணத்திற்கு பிறகு தனுஷ் குறித்து பல கிசுகிசுக்கள் வெளியானாலும், இவர்கள் இருவர் மத்தியிலான உறவு மிக ஆரோக்கியமானதாக இருந்ததாக கருதப்பட்ட நிலையில் நேற்று விவாகரத்து செய்து கொண்டதாக அறிவித்துள்ளனர்.