உங்களின் வாழ்க்கை துணையை ரொம்ப மிஸ் பண்ணீறீங்களா? அப்போ இதை கண்டிப்பாக தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக வாழ்க்கை என பார்க்கும் பிறந்து வாழந்து சுமார் 20 வருடங்கள் எம்மை பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள்.
இதற்கு அடுத்தபடியாக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியையும் எம்முடன் இருக்கும் துனை பார்த்து கொள்வார்கள்.இந்த விடயம் ஆண்களை பொருத்த வரையில் பெண்களுக்கு தான் சரியாக சேரும்.
அப்பாவின் கட்டுபாட்டிற்குள் இருந்து வளர்ந்த பெண் பிள்ளை 20வயதிற்கு பின்னர் அவரின் துணையின் கட்டுபாட்டிற்குள் செல்கிறாள். இதனையே நாம் காதல், திருமணம் என பெயர் வைத்து கொள்கிறோம்.
வாழ்க்கையில் எடுக்கும் சில முக்கியமான முடிவுகளை கூட இவர்கள் தான் எடுக்கிறார்கள். ஏனெனின் அவள் ஒரு பெண் அவளுக்கு ஒன்றும் தெரியாது.
அந்த வகையில் வாழ்க்கை துணையை நாம் மிகவும் மிஸ் பண்ணுகிறோம் என்றால் இந்த விடயத்தை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கும் விடயங்கள்
1. துணையாக இருக்கும் போது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு வகையான அன்பு இருக்கும். இது கட்டாயமாக இருக்க வேண்டும்.
2. அவர்களுக்குள் புரிந்துணர்வு கண்டிப்பாக இருக்க வேண்டும். காதலர்கள் இது இருந்தால் பிரேக்அப் என்ற விடயம் இடம்பெறாது.
3. காதலன் ஆனாலும் கணவராக இருந்தாலும் அவர்களுக்கு சரியான மரியாதையை கொடுக்க வேண்டும். இதனை தவறினால் ஒரு நாள் பிரச்சினை ஏற்படுத்தும். இதனால் நாம் ஆரம்பித்திலிருந்து அதனை கொடுத்து விட வேண்டும்.
4. துரோகம் செய்யக் கூடாது. இது தான் வாழ்க்கையின் மாற்றத்திற்கு காரணமாகவும் இன்று பலரின் மரணத்திற்கு பின்னாள் இருக்கும் உண்மையும் கூட..
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒருவரை பார்த்து அவரை மணக்க வேண்டும் என நினைத்து விட்டால் அவருடனே இருந்து விட வேண்டும். துரோகம் இருந்தால் இரண்டு பேருக்கு அது வருத்தத்தை ஏற்படுத்தும்.
5. பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகள் காதல் செய்தால் அவர்களை எப்படியாவது பிரித்து வேறொருவருடன் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என தீவிரமாக வேலை பார்த்து வருவார்கள்.
இதனை ஆண்கள் நிகாரிப்பார்கள் ஆனால் பெண்கள் ஒரு கட்டத்தில் ஏற்றுக் கொள்வார். பெண்களின் இந்த முடிவிற்கு அவர்களின் தந்தை - தாயார் தான் காரணமாக தான் இருப்பார்கள். இப்போது தான் இந்த மிஸ் என்கிற விடயம் ஆரம்பிக்கின்றது.
மிஸ் பண்ணுவதற்கான காரணம்
உங்களின் துணை உங்களுடன் இருக்கும் போதும் சரி அவர்களை திருமணம் செய்து கொண்டு அவர்களின் பக்கத்தில் வாழும் போது இந்த “மிஸ்” என்கிற வார்த்தைக்கு இடம் இருக்காது.
பெற்றோர்களின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு அவர்களின் வார்த்தைக்காக கொடுத்த வார்த்தையை மீறும் போது தான் இது போன்ற உணர்வு ஏற்படுகின்றது.
உங்களின் துணையை மிஸ் செய்கின்றீர்கள் என்றால் அவர்களை நீங்கள் சொல்ல முடியாத ஒரு துயரத்திற்கு ஆளாக்கியிருப்பீர்கள். அல்லது அவர்களை பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்.
இதனையும் சிலர் இந்த விடயம் புரியாமல் புலம்பி கொண்டு அழைவார்கள். இதனை தவிர்க்க வேண்டும் நினைத்த விடயங்களை நினைத்த நேரத்தில் செய்து விடுங்கள்.
நம்பிக்கையாக ஒரு விடயத்தில் இறங்கி விட்டால் அதிலிருந்து பின் வாங்காமல் அதற்கு என்ன செய்யலாம் என பாருங்கள். இவ்வாறு செய்தாலே மிஸ் என்கிற வார்த்தைக்கு அவசியம் இடம் இருக்காது.