பள்ளி மாணவி மீது ஏற்பட்ட காதல்! ஆணாக மாறி திருமணம் செய்த ஆசிரியையின் ட்ரெண்டிங் புகைப்படம்
இந்திய மாநிலம் ராஜஸ்தானில் பள்ளி மாணவியை காதலித்த ஆசிரியை, திருமணத்திற்காக ஆணாக மாறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியைக்கு மாணவி மீது ஏற்பட்ட காதல்
ராஜஸ்தானில் ஆசிரியராக பணிபுரியும் மீரா என்பவர், அவர் பணிபுரியும் பள்ளியில் கல்பனா என்ற மாணவி காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதல் வழக்கத்திற்கு மாறாக இருந்தாலும் பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். பள்ளியில் உடற்கல்லி வகுப்பின் போது மாணவி கல்பனாவை அவதானித்த மீராவிற்கு அவர் மீது காதல் ஏற்பட்டுள்ளதாம்.
மேலும் மாணவியை திருமணம் செய்வதற்காக குறித்த ஆசிரியை பாலின அறுவை சிகிச்சை செய்து பெண்ணாக இருந்து ஆணாக மாறியுள்ளார். மேலும் தனது பெயரை ஆரவ் குந்தல் என்று மாற்றியதோடு, குறித்த மாணவியையும் திருமணம் செய்துள்ளார்.
இதுகுறித்து மாணவி கூறுகையில் ஆரம்பத்தில் இருந்தே அவரை விரும்பியதாகவும், பாலின அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தாலும் அவரை திருமணம் செய்து கொண்டிருப்பேன் என்று கூறி அதிர்ச்சி கொடுத்துடன், அவரது அறுவை சிகிச்சையின் போது குறித்த மாணவி அவருடன் இருந்துள்ளாராம்.
இதில் மற்றொரு ஹைலைட் என்னவெனில், இந்த திருமணத்திற்கு பெற்றோர்கள் தரப்பும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் சம்மதம் தெரிவித்துள்ளது தான்.