காதல் அதிகரிக்கணுமா? அப்போ இப்படி இருங்க!
காதலைப் போல் ஒரு அழகான விடயம் இந்த உலகில் எதுவுமில்லை. அந்த உணர்வு கொடுக்கும் வலி கூட இன்பம் தான். தாய், தந்தை, உடன் பிறப்புகள் இல்லாமல் கூட ஒருவனால் வாழ்ந்துவிட முடிகிறது.
ஆனால், காதலனோ, காதலியோ பிரிந்து சென்றாலோ அல்லது உயிரிழந்துவிட்டாலோ அவனால்/அவளால் அந்த பிரிவை தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அந்தளவுக்கு காதல் அவர்களின் உள்ளங்களை ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவ்வாறு அற்புதமான காதலில் இன்னும் எவ்வாறு சிறப்பாக விளங்கலாம் என்று பார்ப்போம்!
விட்டுக் கொடுப்பதோடு மன்னிப்பும் கேளுங்கள்
விட்டுக் கொடுத்தல் மற்றும் மன்னிப்புக் கேட்டல் என்பது காதலில் முக்கியமானது. இது இரண்டும் இருந்தாலே பல காதல் பிரிவுகளை தவிர்த்து விடலாம். சண்டையின் போது இருவரில் ஒருவர் விட்டுக்கொடுங்கள், யார் மீது பிழை இருக்கின்றது என்று பார்க்காமல் மன்னிப்புக் கேட்கப் பழகுங்கள்.
சுதந்திரமாக இருக்க விடுங்கள்
இருவரும் என்னதான் காதலர்களாக இருந்தாலும் அவரவருக்கொன்று தனி வாழ்க்கை உண்டு. காதல் அல்லது திருமணத்துக்குப் பின்னர் எதை செய்தாலும் இருவரும் சேர்ந்தே செய்ய வேண்டும், தனியாக நேரம் செலவழிப்பது பிழை என்றும் நினைக்கக் கூடாது. ஒருவருக்கு ஒருவர் இடமளிக்க வேண்டும்.
சுயநலத்தை தவிருங்கள்
காதலில் சுயநலத்துக்கு இடமே இல்லை. ஒருவரது நலனில் மற்றவர் மிகுந்த அக்கறை உள்ளவராக இருக்க வேண்டும். இந்த விடயத்தில் ஆண்கள் உறுதியாக இருந்தால் உங்கள் துணைக்கு மிகவும் பிடிக்கும்.
உங்களது கருத்தை ஒப்புக்கொள்ளும் படி கட்டாயப்படுத்தாதீர்கள்
உறவுகளுக்கிடையில் கருத்து மோதல்கள் கண்டிப்பாக இருக்கும். அது ஆரோக்கியமானதாக இருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், ஒருபோதும் உங்களது துணை நீங்கள் சொல்லும் கருத்தை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தாதீர்கள்.
நண்பர்களாக இருங்கள்
காதலர்களாகவே இருந்தாலும் அதற்குள் ஒரு நட்பு நிச்சயமாக இருக்க வேண்டும். எந்தவொரு விடயத்தையும் சொல்வதற்கான சுதந்திரம், வெளிப்படைத் தன்மை என்பன நிச்சயமாக இருக்க வேண்டும்.
ரொமான்ஸில் கவனமாக இருங்கள்
இருவருமே ரொமான்ஸ் மூடில் இருக்கிறீர்களா? அல்லது ஒருவர் வேறு ஒரு மனநிலையில் இருக்கிறாரா? என்பதை பார்த்து செயலாற்றுங்கள்.
பேசுவதைக் கவனியுங்கள்
உங்கள் காதலனோ/ காதலியோ பேசும்போது அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனியுங்கள். அதற்கு என்ன பதில் அல்லது ஆறுதல் கூறவேண்டுமோ அதைக் கூறுங்கள்.