உங்கள் காதல் இதில் எந்த வகை?
காதல் என்பது மிகவும் அழகான, ஆழமான ஒரு விடயம். இந்த உலகில் காதலைப்போல் மகிழ்விப்பதும் இல்லை காதலைப் போல் சோகத்தில் ஆழ்த்துவதும் இல்லை.
காதலுக்கு வடிவமோ, உருவமோ கிடையாது. அது உணர்வுப்பூர்வமாக கட்டமைக்கப்பட்ட ஒரு புரிதல்.
இவ் உலகில் காதலிக்கத் தெரியாதவன் வாழத் தெரியாதவன் என்று அர்த்தம். எல்லா விடயங்களுக்கும் வகைகளும் பிரிவுகளும் உண்டு. காதலில் கூட 6 வகைகள் இருக்கின்றனவாம். அவை என்னவென்று பார்ப்போமா...

சேமிப்பு காதல்
இதுவொரு ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்து, காதல் உணர்வை புரிந்தும் வைத்திருப்பார்கள். இவளைப் போன்று காதலி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்ற ஏக்கம் உங்கள் மனதில் இருந்தாலும் அவளிடம் உங்கள் மனதிலிருக்கும் காதலைச் சொல்ல முடியாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பும் பட்சத்தில் இந்த நட்பை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து கூட்டிச் செல்லலாம்.
இனிப்பு காதல்
சில தீண்டல்களும் சீண்டல்களும் இருக்கும். அந்த சீண்டலை இருவரும் அனுமதிக்கிறார்கள், தடுப்பதில்லை. இது இனிப்புக் காதல் எனப்படுகிறது. ஆழமான காதல் உணர்வு மற்றும் அதிக உணர்ச்சி கொண்டவராகவும் இருப்பார்கள். இவர்களின் காதலில் காமம் கலந்திருக்கும். சில ஒளிவு மறைவுகள், ரகசியங்கள் இருந்தாலும் காதலை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.

மன்மதக் காதல்
இந்தக் காதலில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இதுதான் ஒரே ஒரு குறைபாடு. இந்தக் காதலில் நல்ல புரிதலும் மற்றவர் விருப்பத்துக்கு இணங்கி விட்டுக் கொடுத்தலும் இருக்கும். இவர்கள் கவர்ச்சியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.
கவன ஈர்ப்பு காதல்
இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் அதிகமாக இருந்தாலும் அவளுக்குள் இதுபோன்ற உணர்வுகள் இருக்காது. எனினும் ஒருவரை ஒருவர் ரசித்துக் கொண்டிருப்பீர்கள். இது பொழுதுபோக்கான காதல்.

திட்டக் காதல்
வாழ்வின் போக்கை சரியாகப் புரிந்துகொண்டு சிந்தித்து முடிவெடுத்து வாழ விரும்புவீர்கள். உங்கள் உணர்வுகள் எல்லைக்கு உட்பட்டதாக இருக்கும். இருவருக்குள்ளும் அன்பு என்றும் மாறாமல் நிலைத்திருக்கும்.
வெற்றிக் காதல்
காதலி அல்லது காதலனுக்கு உங்களை நேரில் பார்க்க வேண்டும் போல் இருந்தால் உடனே வேலையிலிருந்து விடுமுறை எடுத்துக்கொண்டு போய் பார்க்கின்றீர்களா?
இது இருவரிடையேயும் இருக்கின்றதா?
இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுப்பார்கள்.
ஏதும் பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயங்க மாட்டார்கள்.