பிக்பாஸ் லாஸ்லியாவுக்கு குக் வித் கோமாளி பிரபலத்துடன் திருமணமா? கோர்த்துவிடும் நெட்டிசன்கள்!
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
இந்நிகழ்ச்சி பின்ன தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சமூக வலைதளங்களில் எப்பொழுதும் போட்டோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருப்பார்.
இதையடுத்து, இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுடன் சேர்ந்து இருப்பதில்லை எனவும், இருவரும் பிரிந்துவிட்டனர் என்பதும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேப்போல், இவர்களும் எங்குமே இணைந்தபடி ஒரு புகைப்படம் கூட வெளியாகவும் இல்லை. இந்த நிலையில், நெட்டிசன்கள் எப்பொழுதுமே ஏதாவது ஒரு கண்டன்ட் கிடைத்தால் போதும் யாருவுடனாவது கோர்த்துவிட்டு வைரலாக்கி விட்டுவிடுவார்கள்.
அந்த வகையில், குக் வித் கோமாளி அஸ்வினுடன் லாஸ்லியாவை கோர்த்துவிட்டுள்ளனர். அதில், நீங்கள் ஏன் குக் வித் கோமாளி அஷ்வினை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், ரசிகரின் இந்த கேள்வியை தொடர்ந்து பலரும் ஜோடி பொருத்தம் நன்றாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒன்றாக இணைந்து நடித்த சோப்பு விளம்பரம் வைரல் ஆனதால் தான் இந்த கேள்வியை எழுப்பி வருகின்றனர்....