முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் வேண்டுமா? அப்போ உணவுகளை சாப்பிடுங்க
முடி அடர்த்தியாக வளர வேண்டும் என்றால், நாம் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இன்றைய தலைமுறையினரின் பெரும் தொல்லை கொடுக்கும் நிகழ்வாக இருப்பது முடி பிரச்சினை.
இளம் வயதில் நரைமுடியாக இருப்பது, அடர்த்தியான மற்றும் கருமையான முடி வேண்டும் என்று ஆசைப்பட்டாலும் கிடைப்பதில்லை.
இதற்காக வெளியே கிடைக்கும் பல தயாரிப்புகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவிலேயே முடி அடர்த்தியாக நிச்சயம் வளரும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
முடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?
கீரையில், வைட்டமின்கள் ஏ, பி, சி, ஈ, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை முடியை ஆரோக்கியமாக வைப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இனிப்பு உருளை கிழங்களில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ள நிலையில், இவையும் முடிக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.
புரதம், பயோட்டின் மற்றும் வைட்டமின் டி சத்துக்கள் அதிகம் கொண்ட முட்டையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும பிரச்சினையை குறைப்பதில் பெர்ரி அதிகம் உதவி செய்கின்றது. மேலும் இவை முடி வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி செய்கின்றது.
வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் கொண்ட பாதாம் மற்றும் வால்நட்ஸ் இவை முடி வளர நன்கு உதவி செய்கின்றது.
இதே போன்று அவகோடா பழமும் முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.