பலக்கோடிக்கு சொந்தகாரான லோகேஷ் கனகராஜ்! அவரின் ஒரு கார் எவ்வளவு தெரியுமா?
பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ்
கோலிவுட் சினிமாவில் “மாநகரம் ” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
இதனை தொடர்ந்து கைதி, விக்ரம், மாஸ்டர் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இவர் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் யாவும் நினைத்து பார்க்காத வெற்றியை கொடுத்த காரணத்தினால் தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக மாறி விட்டார்.
அடுத்து லோகேஷ், விஜய் கூட்டணியில் “லியோ” திரைப்படம் வெளியாகவுள்ளது.
புதிய காரின் பெறுமதி
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜின் சொத்து தொடர்பான தகவல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லியோ திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு மாதங்களே இருக்கும் நிலையில் லோகேஷ் கனகராஜ் அவர்கள் சுமார் 2 கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ளராம்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த காரின் பெயர் பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் சொகுசு கார் எனவும் கூறப்படுகின்றது.
இந்த செய்தியை பார்த்த இணையவாசிகள், “ லியோ பட வெற்றிக்கு பின்னர் இன்னும் என்ன என்ன செய்வாரோ லோகேஷ் கனகராஜ்..” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |