லோகேஷ் கனகராஜூக்கு லவ் யூ சொன்ன பிரபலம்! யார் தெரியுமா?
மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.
பின்பு நடிகர் கார்த்தியின் நடிப்பில் கைதி படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து, பின்னர் நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த முன்னணி இயக்குநராக மாறினார்.
பின்னர் நடிகர் கமலின் விக்ரம் படத்தின் மூலம் பல முன்னணி பிரபலங்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து புதிய ஆரம்பத்தை தொடங்கி வைத்தார்.
தற்சமயம் நடிகர் விஜய் நடிப்பில் லியோ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளான இன்று, நடிகர் சஞ்சய் தத் ட்விட்டரில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
அதாவது, 'இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உடன்பிறப்பே. உங்கள் வாழ்வில் வெற்றி, சந்தோஷம்,அமைதி, ஆரோக்கியம் என்பவற்றை கடவுள் கொடுப்பார். உங்கள் வாழ்க்கையில் நான் எப்பொழுதும் இருப்பேன். லவ் யூ' என்று பதிவிட்டுள்ளார்.