கீர்த்தி சுரேஷுக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்தார் விஜய்..?
கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் விஜய் சொகுசு கார் வாங்கி கொடுத்ததாக உமைர் சாந்து தெரிவித்துள்ள தகவல் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013ம் ஆண்டு ‘கீதாஞ்சலி’ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.
இதனையடுத்து, தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘இது என்ன மாயம்’ திரைப்படத்தில் நடித்தார்.இதனையடுத்து, தமிழில், விஜய், விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கிசுகிசுக்கப்பட்ட கீர்த்தி சுரேஷ்
சமீப காலமாக நடிகை கீர்த்தி சுரேஷ் பெயர் சமூகவைலத்தளங்களில் அடிப்பட்டு வருகிறது. கீர்த்தி சுரேஷும், நடிகர் விஜய்யும் நெருக்கமாக பழகி வருவதாகவும், அவர்களுக்குள் நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும் தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால், மனைவி சங்கிதா கோபித்துக்கொண்டு லண்டன் சென்று அவர் பெற்றோருடன் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷ், கீர்த்தி தனது பள்ளி நண்பரை பல வருடங்களாக காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சொகுசு கார் வாங்கி கொடுத்தாரா விஜய்?
இந்நிலையில், நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷிற்கு சொகுசு கார் வாங்கி கொடுத்ததாக தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து, உமைர் சாந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘கீர்த்தி சுரேஷுக்கும், விஜய்க்கும் ரகசிய உறவு உள்ளது. விஜய் சமீபத்தில் சொகுசு காரையும், பரிசு பொருட்களையும் கீர்த்தி சுரேஷுக்கு கொடுத்துள்ளார். இது அவரின் மனைவிக்கும் தெரியும். ஆனாலும், அவர் இதை கண்டு கொள்ளவில்லை’ என்று பதிவிட்டுள்ளார்.