பல்லி விழுந்த உணவு விஷமாகுமா? பலரும் அறியாத அதிர்ச்சி உண்மை இதோ
பொதுவாக பல்லி விழுந்த உணவு விஷம் என்று பலரும் கூறுவதுடன், பல படங்களில் கூட அது உயிரைப் பறிக்கும் விஷமாகவே காட்டப்பட்டுள்ளது.
ஆனால் உண்மையில் பல்லி விழுந்த உணவு விஷம் தானா? அதன் உண்மைத்தன்மை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பல்லி விழுந்த உணவு விஷமாகுமா?
பூச்சிகளைக் பொறுத்த வரை விஷத்தன்மை கொண்டவை மற்றும் விஷத்தன்மை அற்றவை என இரண்டு வகைகளில் இருக்கின்றது.
குறிப்பாக எந்தவொரு பூச்சியாக இருந்தாலும் அவை உணவிற்குள் விழும் போது ஒருவிதமான நச்சுப்பொருளை வெளியேற்றுமாம். இதனால் உடல் பாதிப்பு ஏற்படுமாம்.
இதுவே விஷத்தன்மை கொண்ட பூச்சி உணவில் விழுந்து, அந்த உணவினை நீங்கள் சாப்பிட்டால் அதனால் தீவிர உடல் பிரச்சினை ஏற்படும்.
image: shutterstock
நம்மில் பலரும் பல்லியைப் பார்த்தால் அருவருப்பு மற்றும் பயம் கொள்ளோம். இவ்வாறு வீடுகளில் காணப்படும் பல்லிகள் விஷத்தன்மை அற்றது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அவை உணவில் விழும் போது சிறுநீர் அல்லது மலம் கழிக்க நேரிடலாம்.
ஆனாலும் இந்த சிறுநீர் மற்றும் மலம் நச்சுத்தன்மை அற்றதாக இருந்தாலும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதுடன், பல தருணங்களில் வாந்தி, மயக்கம் ஏற்படுமாம். ஆனால் பல்லிகள் உணவில் விழுவதால் அந்த உணவு நஞ்சாக மாறுவதில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள்.
ஆனால் பல்லி பெரும்பாலும் கழிவறை போன்ற அசுத்தமான இடங்களில் இருந்து வருவதால் அவற்றின் கால்களில் கண்ணுக்கு தெரியாத கிருமிகள் இருக்கின்றது. இவை உணவில் கலப்பதால் உணவு கெட்டுப் போய்விடுகின்றது. அது தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடுவதால் இவ்வாறான வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.