கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமா? தொடர்ந்து இந்த ஜுஸை குடித்தால் போதும்
நமது உடலின் மைய பகுதியில் உள்ள ஓர் உறுப்பு தான் கல்லீரல். இந்தக் கல்லீரல் தான் டாக்ஸின்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
இது கொழுப்புகளை உடைத்தெறியும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும் பித்தநீர் கல்லீரலில் தான் உற்பத்தியாகிறது. இந்தக் கல்லீரலை அசுத்தம் இல்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இந்த கல்லீரலை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க தொடர்ந்தும் மூன்று நாட்களுக்கு இந்த ஜுஸை குடிக்கலாம்.
கல்லீரலை பாதுகாக்கும் ஜுஸ்
கொத்தமல்லி இலைகளை இரண்டு கைபிடி எடுத்து உப்பு நீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
கழுவிய பின்னர் அதனை நன்றாக மிக்சியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின் அதில் இரண்டு பூண்டு பற்கள் சேர்த்து அரைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதில் இரண்டு கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து பருக வேண்டும்.
இந்த ஜுஸை காலை வேளையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து அரை மணிநேரத்திற்குப் பிறகு இந்த ஜுஸை குடிக்க வேண்டும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் கல்லீரலில் இருக்கும் நச்சுக்கள் நீங்கி சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |