உங்கள் கல்லீரலைப் பாதுகாக்க வேண்டுமா? இனி இந்த உணவுகளைச் சாப்பிடுங்க
நமது உடலின் மைய பகுதியில் உள்ள ஓர் உறுப்பு தான் கல்லீரல். இந்தக் கல்லீரல் தான் டாக்ஸின்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
இது கொழுப்புகளை உடைத்தெறியும் மற்றும் சீரான செரிமானத்திற்கு உதவும் பித்தநீர் கல்லீரலில் தான் உற்பத்தியாகிறது. இந்தக் கல்லீரலை அசுத்தம் இல்லாமல் சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம்.
இதைப் பாதுகாக்க வேண்டுமெனில் அதற்கு ஏற்ற உணவுகளை உண்ணவேண்டும்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
கல்லீரல் நலனை மேம்படுத்த ஒரு கப் டீ போதுமானது. இதில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடண்ட் சத்துக்கள் டீ-யில் உள்ளன.
பிளாக் மற்றும் கிரீன் டீ அருந்தினால், கல்லீரலில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு அளவுகள் மற்றும் என்ஜைம் அளவுகள் மேம்படும்.
கிரீன் டீ அருந்துவதால் உடலில் உள்ள ஸ்ட்ரெஸ் குறைவதோடு, கல்லீரலில் சேரும் கெட்ட கொழுப்புகள் குறையும்.
கல்லீரல் சார்ந்த நோய்களை கட்டுப்படுத்துவதில் காப்பிக்கு முக்கிய பங்கு உள்ளது. கல்லீரலில் ஏற்படும் நிரந்தர பாதிப்பு (கிரிகோசிஸ்) என்னும் நோய் வர விடாமல் காப்பி தடுக்கும்.
ஓட்ஸ் சாப்பிடுவது கல்லீரல் நலனுக்கும் நல்லது, இதில் நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடண்ட் ஆகியவை இதில் நிறைந்துள்ளது. அதனால் செல்களின் இறப்பு வேகத்தை கட்டுப்படுத்தும்.
விட்டமின் சி சத்து கொண்ட எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களை உட்கொண்டால், உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதை தடுக்கும்.