வெறும் 15 நாட்களில் கல்லீரலை சுத்தப்படுத்தலாம்! எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
நமது உடலின் மிக முக்கிய உறுப்பான கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம், கல்லீரல் சுத்தமாக இருந்தால் மட்டுமெ நமது உடலில் நோய்கள் அண்டாமல் இருக்கும்.
தன்னைத் தானே சரிசெய்து கொள்ளும் தன்மை கல்லீரலுக்கு உண்டு, இதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், ஊட்டச்சத்து குறைபாடு், பசியின்மை, சோர்வு, செரிமானத்தில் பிரச்சனை, தோல் நிறமாற்றம், வாயு பிரச்சனை, நெஞ்சு எரிச்சல் என பல அறிகுறிகள் தென்படும்.
இதனை இயற்கையாகவே சுத்தப்படுத்தும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
சூடான நீர் மற்றும் எலுமிச்சை
காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சம்பழ சாற்றை கலந்து குடிக்கலாம்.
இது கல்லீரலின் அசுத்தங்களை நீக்குவதுடன், பல ஆரோக்கிய நன்மைகளும் அடங்கியுள்ளன.
மஞ்சள்
கிருமி நாசினியான மஞ்சளில் கல்லீரலை சுத்தப்படுத்தும் பண்புகள் உண்டு, என்சைம் பூஸ்டராக செயல்படும் மஞ்சள், உணவுடன் சேர்ந்து வயிற்றுக்குள் சென்ற நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை நீக்குவதில் சிறந்த ஒன்றே, எனவே வாரத்தில் ஒருமுறையாவது நெல்லிக்காய் சாறு எடுத்துக் கொள்ளலாம்.
கீரை
வாரம் இருமுறை கண்டிப்பாக கீரைகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும், இதேபோன்று பச்சை இலைக் காய்கறிகளும் கல்லீரலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்ததே.
மிக முக்கியமாக துரித உணவுகள் மற்றும் மது பழக்கங்களை கைவிட்டாலே கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.