இரவு நேர தூக்கத்தை இல்லாமலாக்கும் பிரச்சனை- அடிக்கடி வருவது ஏன்? கல்லீரல் மோசமாகும் அபாயம்
பொதுவாக மனித உடலில் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று தான் கல்லீரல்.
இந்த உறுப்பு வயிற்றின் மேல் பகுதியின் வலது புறத்தில் அமைந்திருக்கும். இது வழக்கமான உறுப்புகள் போல் அல்லாமல் மனித உடல் இயங்குவதற்கான முக்கியமான பணிகளை செய்கிறது.
உதாரணமாக, செரிமானம், இரத்த சுத்திரிகரிப்பு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்களை சேமிப்பது உள்ளிட்டவைகளை கூறலாம்.
அத்துடன் கல்லீரல் செரிமானத்திற்கு உதவும் பித்தநீரை உற்பத்தியையும் செய்கிறது. பித்த நீர் கொழுப்புக்களை ஜீரணிக்கவும், கழிவுகளை அகற்றவும் உதவியாக இருக்கிறது.
அதிலும் குறிப்பாக, கல்லீரல் 4 மடல்களைக் கொண்டிருக்கும். இவை ஒவ்வொன்றும் 8 பிரிவுகள் மற்றும் ஆயிரக்கணக்கான சிறிய மடல்களால் ஆனவை. இது தான் ஏராளமான கல்லீரல் பிரச்சனைகள் வருவதற்கு முக்கிய காரணமாகும்.
அந்த வகையில், கல்லீரலில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது சில அறிகுறிகளை வைத்து கண்டுக் கொள்ளலாம். அப்படியாயின் இரவு நேரத்தை மோசமாக்கும் கல்லீரல் பாதிப்புக்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகள்
1. இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை வந்தால், அவருக்கு கல்லீரல் ஆபத்து இருக்கலாம். எனவே வழக்கத்திற்கு மாறாக அடிக்கடி சிறுநீரைக் கழித்து வந்தால், உங்களுடைய கல்லீல் சரியாக செயல்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
2. கல்லீரல் நோயின் முதற்காரணியாக அதிகப்படியான தாகம் பார்க்கப்படுகிறது. உடலில் போதுமான அளவு நீர்சத்து இல்லாவிட்டால் அது கல்லீரல் பாதிப்பை உண்டு பண்ணலாம். இரவு நேரத்தில் அதிக தாகம் ஏற்பட்டால் மருத்துவரை பார்ப்பது சிறந்தது.
3. கல்லீரல் செயல்பாடு மோசமாக இருக்கும் பொழுது அடர் நிறத்தில் சிறுநீர் வெளியேறும். ஏனெனின் கல்லீரல் உற்பத்தி செய்யும் பிலிரூபின் உடலில் அதிகமான அளவில் தேங்கி இருக்கும் சமயத்தில் இப்படியான சில அறிகுறிகள் காட்டும். அதிகமாக தேங்கியிருக்கும் பிலிரூபின் சிறுநீரின் நிறத்தை அடர் நிறமாக மாற்றும்.
4. தொடர்ச்சியாக உடல் களைப்பு மற்றும் பலவீனமாக இருப்பது போன்று உணர்ந்தால் கல்லீரல் பாதிப்பாக கூட இருக்கலாம். கல்லீரல் அதிகமாக வேலை செய்து, உடலில் இருக்கும் நச்சுக்களை வடிக்கட்டி அகற்றும். இப்படியான ஒரு சமயத்தில் அடிக்கடி களைப்பு ஏற்பட்டால் சாதாரணமாக எடுத்து கொள்ளாது உடனே மருத்துவரை நாட வேண்டும்.
5. இரவு நேரத்தில் சிலருக்கு அடிவயிறு அடிக்கடி வலிக்கும். அப்படியானவர்கள் கல்லீரல் பாதிப்பால் அவஸ்தைப்படலாம். இந்த பிரச்சினை தொடர்ச்சியாக இருப்பின் பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |