இதயத்தை ஆரோக்கியமாக வைக்க வேண்டுமா? இந்த இலையின் நீர் போதும்
இன்றைய காலக்கட்டத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு பழக்க வழக்கம் உடலில் பல நோய்களை ஏற்படுத்துகின்றது. இதற்கு பல மருந்துகளும் பயன்படுத்தப்படுகின்றது.
ஆனால் இயற்கையில் கிடைக்கும் பல பொருட்களை கொண்டு நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். மூலிகைகளில் முக்கியமானது துளசியாகும். இதன் மூலம் நமது உடலில் பல நோய்கள் தீர்க்கப்படுகின்றது.
துளசி இலைகள் பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஒரு அருமருந்தாகக் கருதப்படுகின்றன. இதில் வைட்டமின் சி, துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.இது பற்றிய முழுமையான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
துளசி இலை தண்ணீர்
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இப்போது கழுவிய துளசி இலைகளை வேகவைத்த தண்ணீரில் சேர்த்து, இந்த தண்ணீரை குறைந்தது ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
இப்போது இந்த தண்ணீரை ஒரு கோப்பையில் வடிகட்டி, அதில் சிறிது தேன் சேர்த்து தினமும் பருகலாம்.
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்தை வலுவாக வைத்திருக்க விரும்பினால், தினமும் துளசி இலை தண்ணீரைக் குடிப்பத நல்லது. துளசி நீரில் காணப்படும் அனைத்து கூறுகளும் கடுமையான மற்றும் ஆபத்தான இதய நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.
துளசி இலை நீர் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும். வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகின்றது.
துளசி நீரை தொடர்ந்து உட்கொள்வதன் மூலம், சளி மற்றும் இருமல் பிரச்சனைகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம். இது தவிர, துளசி நீர் உங்கள் உடலில் நச்சுக்களை நீக்குவதற்கும் உதவியாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |