திடீரென உங்கள் எடைக் குறைகின்றதா? அவதானம் இது கல்லீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்
நமது உடலின் மைய பகுதியில் உள்ள ஓர் உறுப்பு தான் கல்லீரல். இந்தக் கல்லீரல் தான் டாக்ஸின்கள் மற்றும் நச்சுமிக்க பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுகிறது.
இந்தக் கல்லீரலில் இருக்கும் செல்களில் தான் புற்றுநோய் ஆரம்பிக்கிறது. ஏனைய நோய்களைப் போலவே இந்தக் கல்லீரல் புற்று நோயையும் ஆரம்பத்திலேயே தெரிந்துக் கொண்டு சிகிச்சைப் பெற்றால் விரைவில் குணமாகிவிடும்.
ஆனால் முற்றிய பிறகு சிகிச்சை பெற்றால் அது பலனளிக்காமல் தான் போகும். ஆகவே உங்கள் உடலில் இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உடனே அதற்கான சிகிச்சைகளை ஆரம்பிப்பது நல்லது.
கல்லீரல் புற்று நோயின் அறிகுறிகள்
திடீரென குறையும் உடல் எடை
கல்லீரல் பெரிதாவதால் வலது புறத்தில் இருக்கும் விலா எழும்பில் ஏதோ தட்டுப்படுவது போன்ற உணர்வு
மண்ணீரல் பெரிதாவதால் இடது புறத்தில் இருக்கும் விலா எழும்பில் ஏதோ தட்டுப்படுவது போன்ற உணர்வு
அடிவயிற்றில் வீக்கம் அல்லது வலி
மஞ்சள் நிறத் தோல் அல்லது அரிப்புத்தன்மை கொண்ட தோல்
உடல் பலவீனம்
குறைவாக சாப்பிட்டிருந்தாலும் முழுமையாக இருப்பது போன்ற உணர்வு
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |