உயிருக்கு எமனாக மாறும் கல்லீரல் வீக்க நோய் : இதிலிருந்து தப்பிக்க இதோ வழி!
நம் உடலில் மிகப்பெரிய இரண்டாவது உறுப்பு என்றால் அது கல்லீரல் தான். அளவுக்கு அதிகமாக குடிப்பழக்கம் வைத்திருந்தால் அது கல்லீரல் நோயை ஏற்படுத்திவிடும். உடல் பருமனாலும் இந்நோய் தாக்கக்கூடும்.
கல்லீரல் தான் நம் உடம்பில் இருக்கும் சிக்கலான உறுப்பாகும். ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்திகரித்து, செரிமானத்திற்கு உதவி செய்கிறது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையையும் பராமரிக்க பயன்படுகிறது.
கல்லீரல் நோய்யிலிருந்து நம்மை எப்படி பாதுகாத்துக் கொள்ளலாம் என்று பார்ப்போம் -
1. குடிப்பழக்கமும், நீரிழிவு நோய் தான் கல்லீரலை அதிகளவில் பாதிக்கிறது. இந்நோயிலிருந்து குணமடைய குடிப்பழக்கத்தை முற்றிலுமாக கைவிடுவது நல்லது.
2. ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வாருங்கள். உணவில் சர்க்கை மற்றும் உப்பு அளவை குறைத்துக் கொள்ளுங்கள்.
3. பச்சை காய்கறிகள், கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் எடை அதிகரிக்கக்கூடாது.
4. தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். முளை கட்டிய பயிறு வகைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
5. பூண்டில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. பூண்டை தினமும் உட்கொண்டு வந்தால் உங்களுடைய தொப்பை குறைந்து உடல் எடை குறையும்.
6. கல்லீரல் வீக்க நோய்யை குணப்படுத்தும். தினமும் வால்நட்டை சாப்பிட்டு வரலாம். இவை இன்சுலின் எதிர்ப்பு, ஆக்ஸிடேடிவ் அழுத்தம் ஆகியவற்றை குறைக்கும்.
7. ஆளி விதையில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக இருக்கிறது. இது உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவி செய்யும். கல்லீரலில் அழற்சி ஏற்படாமல் தடுக்கும்.
8. ஓட்ஸில் அதிகளவில் நார்ச்சத்து உள்ளது. இதனால், இவற்றை அன்றாடம் உட்கொண்டு வந்தால் கல்லீரல் வீக்க நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
9. சாலியா விதைகளில், ஓமேகா-3 கொழுப்பு இருக்கிறது. இந்த சாலியா விதையை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் உள்ள கொழுப்பை இது குறைக்கும். கல்லீரல் நோயிலிருந்து உங்களை பாதுகாக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |