இது தான் உண்மையான கிரிக்கெட்.. 100-வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்த விராட் கோலி
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலையில் 9.30 மணியளவில் நடைப்பெறுகிறது. இது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.
இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டி குறித்து மனம் திறந்துள்ளார். அதில், பேசியபோது, “100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை.
இது எனக்கு இது மிக நீண்ட பயணம். நான் நிறைய கிரிக்கெட் விளையாடி உள்ளேன். நான் எனது உடற் தகுதிக்காக கடுமையாக உழைத்துள்ளேன். இந்த சமயத்தில் கடவுளுக்கு நன்றி கூற விரும்புகிறேன். எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இது ஒரு பெரிய தருணம்.
மேலும், என்னைப் பொறுத்த வரையில் இந்த டெஸ்ட் போட்டி குறித்து மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர்கிறேன். எனது பயிற்சியாளரும் இது குறித்து மகிழ்ச்சி அடைந்து உள்ளார்.
நான் தனிப்பட்ட முறையில் குறைந்த ரன்களை இலக்காக கொண்டு ஒருபோதும் விளையாடியதில்லை. நாட்டிற்காக அதிக ரன்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்தது. நான் ஜூனியர் கிரிக்கெட்டில் பெரிய இரட்டை சதங்களை அடித்துள்ளேன்.
எனவே, நீண்ட நேரம் பேட்டிங் செய்து வெற்றி பெற வேண்டும் அல்லது முதல் இன்னிங்ஸ் முன்னிலை பெற வேண்டும் என்பதே எனது எண்ணமாக இருந்தது. இதை தான் நான் எப்போதும் பின்பற்றி வருகிறேன்.
இது போன்ற விஷயங்கள் உங்கள் உண்மையான தன்மையை வெளிப்படுத்தும் என்னைப் பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் தான் உண்மையான கிரிக்கெட். என மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார்.
'I never thought i'll play 100 Test matches. It has been a long journey. Grateful that i've been able to make it to 100' - @imVkohli on his landmark Test.
— BCCI (@BCCI) March 3, 2022
Full interview coming up on https://t.co/Z3MPyesSeZ. Stay tuned! #VK100 pic.twitter.com/SFehIolPwb