வெறுப்பேற்றிய நபர் - கை விரலை துண்டாக்கிய சிங்கம் - அதிர்ச்சி வீடியோ
கூண்டில் இருந்த சிங்கத்தை வெறுப்பேற்றிய நபருக்கு நேர்ந்த விபரீத வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சிங்கத்தை வெறுப்பேற்றிய நபருக்கு நேர்ந்த கதி
சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில்,
ஒரு கூட்டில் மிகப் பெரிய சிங்கம் ஒன்று இருந்தது. அப்போது, தடுப்பு வேலியை மீறி பார்வையாளர் அந்த சிங்கம் இருக்கும் கூண்டுக்கு அருகில் சென்றார். சிங்கமும் அமைதியாகவே இருந்தது. ஆனால், இந்த நபர் கூண்டின் வலையின் உள்ளே கை விரலை விட்டு சிங்கத்தை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் கையை வலைக்குள் விட்டுக்கொண்டிருந்த அந்த நபர் கை விரலை கவ்விக்கொண்டது சிங்கம்.
இதனையடுத்து, அந்த நபர் எவ்வளவு முயற்சி செய்தும் அவரால் சிங்கத்திடமிருந்து தன் கையை விடுவிக்க முடியவில்லை. இறுதியில் கை விரல் துண்டான நிலையில் அவர் சிங்கத்திடமிருந்து விடுவிக்கப்பட்டார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், தடுப்பை மீறி சென்று, விலங்குகளை துன்புறுத்தினால் இந்த கதி தான் நேரும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
Don't worry, he don't bite pic.twitter.com/AYSJ4ERXFc
— CCTV IDIOTS (@cctvidiots) April 11, 2023