இளம் வயதினர்களே இதய நோய் வராமல் தடுக்க வேண்டுமா? இதை கண்டிப்பா செய்யுங்க
பலருக்கும் இளம் வயதிலேயே மாரடைப்பு பக்கவாதம் போன்ற இதய நோய்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதற்கு மிக முக்கியக் காரணம் முறையற்ற உணவுப் பழக்கமும் தவறான வாழ்வியல் முறைகளும் தான்.
40 வயதுக்கு மேல் 60 வயதானவர்களுக்கு லேசான இதய பாதிப்புக்கான சாத்தியக் கூறுகள் இருந்த நிலையில், தற்போது மிக இளம் வயதிலேயே இதய நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
முக்கியமாக புகைப்பழக்கம், சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் ஆகியவை உள்ள நபருக்கு இதய நோய் பாதிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகவே இருக்கின்றன.
இதுபோன்ற நோய்களில் இருந்து நம்மளை பாதுக்காக்க முறைய உணவுகள் அவசியம். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், தாவர அடிப்படையிலான புரதங்கள், லீன் மீட், மீ்ன வகைகள், நட்ஸ் ஆகியவற்றை தினசரி உணவில் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி, இனிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வயதானவர்கள் அடிக்கடி நடைப்பறிச்சியை மேற்கொள்ள வேண்டும்.
இளைஞர்கள் வாரத்திற்கு 150 நிமிடங்களாவது ஏரோபிக் போன்ற பயிற்சிகளில் கட்டாயம் ஈடுபட வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையை சரியாக நிர்வகிக்க வேண்டும்.
எடை குறைக்க, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்க, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் பிரச்சினை ஏற்படாமல் தவிர்க்க, புகைப்பழத்தைக் கைவிடுவது மிக அவசியம்.