உயிரை காப்பாற்றிய நாய்! அரைமணி நேரமாக நீச்சல் குளத்தைச் சுற்றி சுற்றி ஓடி வரும் நெகிழ்ச்சி காட்சி
நீச்சல்குளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பொமேரியன் நாயை, விடா முயற்சியால் மற்றொரு நாய் காப்பாற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. சிசிடிவியில் பதிவான காட்சியில் நீச்சல் குளம் அருகே பொமேரியன் நாய் ஒன்று விளையாடிக்கொண்டிருக்கிறது.
அப்போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த நீச்சல் குளத்துக்குள் தவறி விழும் அந்த நாயால் மேலே ஏறிவர முடியவில்லை.
இதனால் நீண்ட நேரமாக தண்ணீருக்குள்ளேயே நீந்திக்கொண்டு, உயிரைக் காபாற்றிக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது.
அந்த நேரத்தில் அங்கு ஓடி வரும் மற்றொரு நாய், நீருக்குள் பொமேரியன் நாய் ஒன்று மாட்டிக்கொண்டு தத்தளிப்பதை கண்டு உதவ முயற்சிக்கிறது. சுமார் அரைமணி நேரமாக நீச்சல் குளத்தைச் சுற்றி சுற்றி ஓடி வரும் நாய், நீருக்குள் இருக்கும் நாயை காப்பாற்ற பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறது.
எந்த முயற்சியும் உடனடியாக பலன் கொடுக்கவில்லை. பார்ப்பவர்களுக்கு கூட எப்போது இந்த நாய், நீருக்குள் த த்தளிக்கும் நாயை காப்பாற்றும் என்ற ஆவலும் ஏற்படுகிறது.
ஒருவழியாக நீருக்குள் இருக்கும் பொமேரியன் நாயைக் மற்றொரு நாய் காப்பாற்றி கரை சேர்க்கிறது. பின்னர் இருவரும் சேர்ந்து வழக்கம்போல் விளையாடுகின்றனர்.
இந்த காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.