பேன் தொல்லை அதிகமாக இருக்கின்றதா?
நமக்கு எவ்வாறு முடி உதிர்தல் ஒரு பெரும் பிரச்சினையாக இருக்கின்றதோ அதேபோல் தான் தலைமுடியில் உள்ள பேனும் பெரும் பிரச்சினையாக உள்ளது. பேன்கள் நமது இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கின்றன.
பேன்களின் முட்டையானது, முடியுடன் ஒட்டி அரிப்பை ஏற்படுத்துகின்றது. அதுமட்டுமில்லாமல் பேன்கள் சீப்பின் வழியாகவோ அல்லது உபயோகிக்கும் தலைமுடியின் வழியாகவோ ஒருவரிலிருந்து இன்னொருவருக்கு பரவுகிறது. இந்த பேன்களில் மூன்று வகை உள்ளன.
இந்த பேன்களினால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அடிக்கடி தலையைச் சொறிந்துகொண்டே இருப்பார். இது அவர்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. பொதுவாக பேன்கள் இரவு நேரங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இது தூக்கமின்மைக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
இது தலைமுடியில் ஒருவித எரிச்சலையும் நமச்சலையும் ஏற்படுத்தும். இந்த பேன் தொல்லையைத் தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் எனப் பார்ப்போம்...
வெதுவெதுப்பான தேங்காயெண்ணெயை தலையில் தடவ வேண்டும், இதில் பூஞ்சை மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் பேன்களை அழிக்க உதவும். இதை தேய்ப்பதால் அரைமணி நேரம் கழித்து முடிக்கு அடியில் இருக்கும் பேன்கள் வெளியில் வரும்.
இப்போது மெல்லிய குறுகிய சீப்பு கொண்டு முடியை சீவ வேண்டும். எல்லா பேன்களும் வெளியில் வரும்.
ஒலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், ஜாதிக்காய் எண்ணெய் போன்ற எண்ணெயில் ஏதாவதொன்றை தலையில் தடவி 10 மணிநேரம் கழித்து குளிக்க வேண்டும். இதனால் பேன் தொல்லை குறைவடையும்.