chanakya topic: உறவுகளின் உண்மை முகத்தை அறியணுமா? இந்த நேரத்தில் கவனித்து பாருங்க
பண்டைய காலத்தில் இந்தியாவில் வாழ்ந்த மிகச் சிறந்த அறிஞராகவும், சந்திரகுப்த மௌரியரின் முதன்மை அமைச்சராகவும், அரசின் வழிகாட்டியாகவும் திகழ்ந்து பிற்காலத்தில் உலக புகழ் பெற்றவர்தான் ஆச்சாரிய சாணக்கியர்.
இவர் வாழ்வில் கடைப்பிடித்த முக்கிய விடயங்கள் மற்றும் அவரின் வாழ்க்கை அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.
சாணக்கிய நீதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் பிரகாரம் நம்முடன் இருப்பவர்களின் எந்த உறவு நமக்கு உண்மையான அன்பை வெளிப்படுத்துகின்றனர் என்பதை எவ்வாறு அறிந்துக்கொள்ளலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
உறவுகளை எப்படி அறிவது?
சாணக்கிய நீதிபதியின் அடிப்படையில் ஒருவர் கடினமான நேரத்தில் இருக்கும் போது நமது உறவுவினர்களின் உண்மை தன்மையை அறிய முடியும் என்கின்றார். அப்போது அவர்கள் நம்மிடம் நடந்துக்கொள்ளும் விதமே அவர்களின் உண்மை முகத்தை பிரதிபளிக்கின்றது.
வாழ்வில் செல்வத்தை இழக்கும் சந்தர்ப்பம் நேர்ந்தால் அல்லது பெரிய அவமானம் ஏற்படும் சந்தர்ப்பதில் மனைவியின் உண்மை முகத்தை அறிய முடியும் என்கின்றார் சாணக்கியர்.
அந்த சூழ்நிலையில் அவர் எப்படி அக்கறையுடன் நடந்துக்கொள்கின்றார் என்பது தான் அவரின் உண்மை அன்பை வெளிப்படுத்தும்.
வேலைக்காரனின் குணம் ஒரு கடினமான வேலையை எவ்வளவு திறமையாக கையாள்கிறார் என்பதன் மூவமே அறியப்படுகின்றது.
அதுபோல் நாம் பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொள்ளும் சமயங்களில் அதிலிருந்து மீள்வதற்கு சகோதரர்கள் மற்றும் உறவினர்களின் எந்த வகையில் உறுதுணையாக இருக்கின்றார்கள் என்பதே அவர்களின் உண்மையாக குணம் என்கின்றார் சாணக்கியர்.
நிதி சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவருக்கு நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்றால் துன்பத்திலும், பஞ்சம் வந்தபோதிலும், எதிரிகள் அச்சுறுத்துதட் போது விட்டு விலகாமல் துணையாக இருக்கவேண்டும் இப்படி இருந்தால் தான் அவர் உண்மையான நட்புடன் இருக்கின்றார்கள் என்று அர்த்தம்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |