Chanakya: இந்த குணங்கள் உங்களிடம் இருக்கா? அப்போ சமூகத்தில் உங்க மரியாதை தானாக உயரும்
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞராகவும் சிறந்த ராஜதந்திரியாகவும், ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்தவர் தான் ஆச்சார்யா சாணக்கியர்.
மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பற்றியும் ஆழ்ந்த அறிவையும் ஞானத்தைக் கொண்டிருந்தமையால் இவரின் கருத்துக்கள் பிற்காலத்தில் உலகப்புகழ் பெற்றதுடன் வாழ்வில் சாதித்த பலருக்கு இது சிறந்த வாழ்ககை நெறியாகவும் இருந்துள்ளது.
இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதியாகும்.
அந்த வகையில் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயர வேண்டும் என்றால் நம்மிடம் முக்கியமாக இருக்க வேண்டிய குணங்கள் பற்றி சாணக்கிய நீதிதியில் இருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பை இந்த பதிவில் பார்க்கலாம்.
சமூக அந்தஸ்தை உயர்த்தும் முக்கிய விடயங்கள்
சாணக்கியரின் கருத்தின் அடிப்படையில் வாழ்க்கையில் தங்களின் பொறுப்புகளையும் கடமைகளையும் சரிவர நிறைவேற்றும் நபர்கள் சமூகத்தில் சிறந்த மனிதர்களாக பார்க்கப்படுகின்றார்கள்.பொறுப்புகளுக்கு மதிப்பளிப்பவர்கள் எப்போதும் மற்றவர்களால் விரும்பப்படுகின்றார்.
சமூக நலன்களுக்கான தங்களின் அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் நபர்களுக்கு எப்போதும் சமூகத்தில் உயர்ந்த இடம் கொடுக்கப்படுகின்றது.
இந்த குணம் கொண்டவர்கள் சமூகத்தில் மற்றவர்கள் மனங்களில் என்றும் உன்னதமான இடத்தில் இருப்பார்கள். ஒரு புத்திசாலி மனிதன் எப்போதும் சமூகத்தில் மதிப்பை பெறுகின்றான்.
சாணக்கிய நீதியின் பிரகாரம் மற்றவர்களை விமர்சிப்பதும், கிண்டல் செய்வதும், மற்றவர்களின் மனதை புன்படுத்துவதும் ஒருவருக்கு சமூகத்தில் கிடைக்கும் மதிப்பை அடியோடு இல்லாமல் செய்துவிடுகின்றது.
இந்த குணம் கொண்டவர்களிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் அவர்களை சமூகத்தினர் மதிக்கவும் மரியாதை கொடுக்கவும் மாட்டார்கள்.
சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயர வேண்டும் என்றால் மற்றவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் குணம் நிச்சயம் இருக்க வேண்டும்.
சாணக்கிய நீதி அடிப்படையில் யாரிடம் உண்மையும் நேர்மையும் இருக்கின்றதோ அவர்களின் மதிப்பும் மரியாதையும் சமூகத்தில் உயர்ந்த காணப்படும்.
நேர்மையாக குணத்துடன் வாழ்பவர்கள் வாழ்ந்து முடித்தன் பின்னரும் கூட அவர்களுக்கான இடம் சமூகத்தில் என்றும் நிலைத்திருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |