புதிய கார் வாங்கிய பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் - பழைய கார் குறித்து உருக்கமான பதிவு!
பிக்பாஸ் புகழ் அனிதா சம்பத் தற்போது சொந்த உழைப்பில் புதிய கார் வாங்கியுள்ளார். ஏற்கெனவே Second Hand கார் பயன்படுத்தி வந்தவர் இப்போது TATA கார் வாங்கியுள்ள அழகிய தருணத்தின் காணொளியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். குறித்த காணொளிக்கு தற்போது இணையத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
அனிதா சம்பத்
அனிதா சம்பத்தை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அந்தளவுக்கு சின்னத்திரையிலும் வெள்ளித்திரையில் மக்களுக்கு அதிக பரிச்சயமானவர்.

பிரபல தொலைக்காட்சியில் அழகான தூய தமிழில் செய்திகள் வாசித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இவர், அதன் பின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானார்.
அது மட்டும் இன்றி டேன்னி, காலங்களில் அவள் வசந்தம்,தெய்வ மச்சான் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமன்றி தற்போது நிறைய தனியார் விளம்பரங்கள் நடிப்பது, சொந்தமான யூடியூப் பக்கம் நடந்துவது என பிஸியாக இருந்து வருகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலந்துக்கொண்ட பின்னர் தனது முதல் சொந்த வீட்டை சில வருடங்களுக்கு முன்பு கட்டியிருந்தார்.அதனை தொடர்ந்து சொந்த உழைப்பில் 2வது வீட்டையும் வாங்கியிருந்தார்.

இந்நிலையில், இதுவரையில், Second Hand கார் பயன்படுத்தி அனிதா தற்போது TATA கார் வாங்கியுள்ளார். குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அத்துடன் தனது பழைய கார் பற்றி உருக்கமாக பேசியும் ஒரு காணொளியை பகிர்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |