வெறும் 7 ஆயிரத்திற்கு புது ஸ்மார்ட்போன் அறிமுகம்! அம்சங்கள் என்ன தெரியுமா?
லாவா நிறுவனத்தின் முற்றிலும் புதிய யுவா 4 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
Lava Yuva 4
லாவா நிறுவனம் இந்த ஆண்டில் தொடக்கத்தில் லாவா யுவா 3 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது லாவா யுவா 4 மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய லாவா யுவா 4 மாடலில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜிபி ரேம், 4 ஜிபி விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போனில், ஆண்ட்ராய்டு 15 அப்டேட் வழங்குவதாகவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.
கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட், வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
புதிய லாவா யுவா 4 ஸ்மார்ட்போன் கிளாஸி வைட், கிளாஸி பர்ப்பில் மற்றும் கிளாஸி பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை விரைவில் துவங்க இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |