லேட்நைட் தூங்குற பழக்கம் இருக்கா? அப்போ இந்த பிரச்சனை நிச்சயம் வரும்- ஜாக்கிரதை
சிலர் திரைப்படங்கள் பார்த்து விட்டு அல்லது அவர்களுடன் சமூக வலைத்தளங்களில் இருந்து விட்டு இரவு தூக்கத்தை இழக்கிறார்கள்.
இந்த பழக்கம் ஒரு நாள், இரண்டு நாள் என ஆரம்பமாகி, அது வருடங்களாக மாறுகிறது. இதனால் தூக்கம் இன்மை, மலச்சிக்கல், மனநிலை பாதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு ஆளாகுகிறார்கள்.
அப்படி என்றால் இந்த பழக்கமானது சத்தம் இல்லாமல் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இரவு நேரம் சென்று தூங்கினால் என்ன நடக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
சரியாக சாப்பிடாமல் இருப்பது எந்தளவு ஒரு பிரச்சினையோ, அதே அளவிற்கு தூங்காமல் இருப்பதாலும் பிரச்சினைகள் வரும். போதுமான அளவு தூக்கம் இல்லாதவர்கள் நாளடைவில் பல்வேறுப்பட்ட நோய்களுக்கு ஆளாகுகிறார்கள் என ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்த வகையில், இரவில் நீண்ட நேரம் தூங்காமல் இருப்பவர்களுக்கு ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
இரவு தாமதமாக தூங்கினால் என்ன நடக்கும்?
1. இரவு நேரம் சென்று தூங்க செல்லும் பழக்கம் கொண்டவர்களுக்கு நாளடைவில் மனநலம் பாதிப்பு வர வாய்ப்பு உள்ளது. இதனால் வேலை, படிப்பு என எதையும் சரியாக பார்க்க முடியாத நிலை உள்ளது. முடிந்தளவு உரிய நேரத்திற்கு தூங்கி, சரியான நேரத்தில் எழும்ப வேண்டும். மனசோர்வு பிரச்சினையுள்ளவர்கள் குறைந்தது 8 மணிநேரம் தூங்கினால் இந்த பாதிப்பில் இருந்து வெளியில் வரலாம்.
2. தொடர்ச்சியாக இரவில் தூக்கம் இல்லாதவர்கள் உரிய மருத்துவரை பார்க்க வேண்டும். ஏனெனின் போதுமான தூக்கம் இல்லாத போது கார்டிசால் என்ற முதன்மை ஸ்ட்ரெஸ் ஹார்மோன் உற்பத்தியாகும். இது மனநலம் சம்பந்தப்பட்ட நோய்களை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு நடுக்கம், பதட்டம் ஏற்படும். அத்துடன் சிலருக்கு சிறுவயதில் இருந்த ஞாபக சக்தி மற்றும் அறிவுத்திறன் செயல்பாடு பாதிக்கப்படும்.
3. இரவு தாமதமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்கள் பெரும்பாலும் மந்த நிலை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களால் ஒருவேலையை முழு கவனத்துடன் செய்ய முடியாது. ஞாபக சக்தி மற்றும் பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அறிவு திறன் செயல்பாடுகள் குறைவாக இருக்கும். 7 மணி நேரம் தூங்கும் பொழுது மூளையின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.
4. குடல் பாதிப்பு வருவதற்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாகும். குடல் பாதிப்பால் அவஸ்தைப்படுபவர்கள் போதுமான அளவு தூங்க வேண்டும். இந்த பழக்கம் நாளடைவில் செரிமானம் மற்றும் மெட்டபாலிசத்தில் தாக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாகும்.
5. தூக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பது உங்களுடைய முழு உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது. ஒவ்வொரு நாளும் குறைந்தது 7 முதல் 9 மணி நேரம் தூங்க வேண்டும். குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு முன்னரே தொலைபேசி மற்றும் கணனி பார்ப்பதை குறைக்க வேண்டும். அப்போது தான் நிம்மதியான தூக்கத்தை பெற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
