சந்திர கிரகணம் மீன ராசியில்.. இந்த 4 ராசிக்காரர்களின் வாழ்க்கை மாறும்- உங்க ராசி என்ன?
இந்த இரத்த சந்திர கிரகணத்தில் குறிப்பிட்ட நான்கு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல ஒரு மாற்றம் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நான்கு ராசிக்காரர்களின் பலன்
பூமி தனது நிழலை முழுமையாக முழு நிலவின் மீது விழும்போது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
இதனால் சந்திர மேற்பரப்பின் சிவப்பு நிறத் தோற்றம், கிரகண நிழலின் வெளிப்புற விளிம்பைச் சுற்றியுள்ள சூரிய ஒளிக்கதிர்கள் பூமியின் வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும்போது வடிகட்டபப்பட்டு ஒளிவிலகல் செய்யப்படுவதால் இது ஊறடபடுகின்றது.
இந்த கிரகணம், ஆசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருப்பவர்களுக்கு முழுமையாக தெரியும்.
அதே சமயம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இருப்பவர்களுக்கு ஒரு பகுதியாக தெரியும்.
இதனை தொடர்ந்து ஜோதிடப்படி, கிரகணம் மீன ராசியில் உருவாகின்றது என கூறப்படுகின்றது. இதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருந்தாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமான பலன்கள் கிடைக்கும்.
அப்படியாயின், சந்திர கிரகணத்தால் பலன்களை அனுபவிக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
மீனம் | உங்களது மீன ராசியில் சந்திரன் உதயம் ஏற்படுகிறது இது ஒரு சக்திவாய்ந்த தருணமாக உங்களுக்கு இருக்கும். பழைய காயங்களை இல்லாமல் செய்ய இது நல்ல தருணம். நீங்கள் ஆன்மீக நடைமுறைகளைத் தழுவ அல்லது ஆரோக்கியமான எல்லைகளை அமைத்துக்கொள்ள இது ஒரு நல்ல தருணம். குறிப்பாக நீங்கள் நெருங்கிய உறவுகளுடன் நெருக்கமாவீர்கள். பிரச்சனையை கண்டு பயந்து செல்வதை தவிர்க்கவும். நீங்கள் பல படைப்புகளை இந்த காலத்தில் செய்வீர்கள். காதல் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். |
கன்னி | கன்னி ராசி இடங்கள் சில நீங்கள் நிலையான தன்மையை உணர்வீர்கள். நீங்கள் எல்லா விடயத்திலும் உணர்ச்சிப்பூர்வமாக செய்ற்பட ஆரம்பிப்பீர்கள். கன்னி ராசியினருக்கு, இந்த கிரகணம் உங்களுக்கு உறவில்லாத ஒருவர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும். பல விடயங்களை மிகவும் தைரியமாக செய்வீர்கள். |
தனுசு | தனுசு ராசிக்காரர்களுக்கு நீங்கள் நீங்களாக இருக்க இது ஒரு நல்ல தருணம். உங்களுக்கு கிரகணம் நான்காவது வீட்டில் உருவாகின்றது. இதனால் நீங்கள் பலருடனும் மோதல்களை சந்திக்க நேரிடும். வீட்டிற்கு வரும் வஜருந்தினர்களுடன் சில மனஸ்தாபங்கள் ஏற்படும். இதனால் நீங்கள் உறவுகளுடன் மிகவும் பொறுமையுடன் நடந்துகொள்ள வேண்டும். இந்த சந்திர கிரகணம் உங்கள் வாழ்க்கையில் சொந்ந காலில் நின்று உங்கள் உழைப்பில் வாழ்க்கையில் முன்னேற வழிவகுக்கும். |
மிதுனம் | மிதுன ராசிக்காரர்களுக்கு , சந்திர கிரகணம் அவர்களின் தொழில்பாரிய மாற்றத்தை கொண்டு வரும். ஆனால் இது லாபத்தை தருமா அல்லது நஷ்டத்தை தருமா என்பது கூறமுடியாது. உங்களுக்கு வேலைப்பழு அதிகரிப்பு இருக்கும். இதனால் எப்போதும் கோபத்துடன் செயல்படுவீர்கள். பணம் சம்பாதிப்பதில் உங்கள் முழு கவனமும் மாறுபடும். எனவே மிதுன ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பது அவசியம். இல்லையெனில் அவர்கள் தங்கள் உடல்நலத்தை இழக்க நேரிடும். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
