விஷத்தை துப்பும் நாகப்பாம்பு! ஏன் இப்படி செய்துன்னு உங்களுக்கு தெரியுமா?
நபரொருவர் தன்னை பிடிக்க முயலும் போது மொசாம்பிக் விஷம் துப்பும் நாகப்பாம்பொன்று, விஷத்தை வேகமாக துப்பும் அரிய காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.
'பாம்பு என்றால் படையும் நடுங்கும்' என்பார்கள். உலகில் உள்ள மிக அதிக விஷமுடைய பாம்புகளின் பட்டடியலில் நாகங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன.
குறிப்பாக மொசாம்பிகில் காணப்படும் ஆப்பிரிக்க நாகப்பாம்புகள் என்ற இனத்தை சேர்ந்த பாம்புகள் துப்பும் விஷம் கண்களில் பட்டால் தாங்க முடியாத வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும்.
Spitting cobra என அறியப்படும் விஷத்தை உமிழும் நாகப்பாம்பு வகை ஆப்பிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றது.
இது எதிரிகளிடமிருந்து தங்களை தற்காத்து கொள்ளும் நோக்கிலும் இரையை கொள்ளும் நோக்கிலும் இவ்வாறு விஷத்தை தூரத்தில் இருந்து துப்புகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மனிதர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் தற்காலிக பார்வை இழப்பை ஏற்படடும் அபாயம் காணப்படுகின்றது. ஆனால் இரையை எளிதில் பிடிக்கவே இந்த வகை பாம்புகள் இவ்வாறு செய்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
