நீரிழிவு நோயாளிகளே! நள்ளிரவில் பசி ஏற்படுகின்றதா? உங்களுக்கான டிப்ஸ் இதோ
நீரிழிவு நோயாளிகளுக்கு நள்ளிரவில் பசி எடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோய்
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் எப்பொழுதும் தனது சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு இரவு உணவை குறைவாகவே எடுப்பார்கள்.
இதனால் நள்ளிரவில் பசி ஏற்படுகின்றது. இதனால் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகள், ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அபாயத்தை கொண்டுள்ளது.
பசியை போக்கினாலும் ரத்த சர்க்கரை அளவை பாதிக்காத உணவினை தேர்ந்தெடுப்பது சவாலானதாக இருக்கின்றது. பாதாம் பருப்பில் குறைந்த கார்போஹைட்ரேட் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பாதாம் ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பதற்கு உதவுகின்றது. ஆதலால் தூங்க செல்வதற்கு முன்பு ஒரு கைப்பிடி பாதாம் பருப்பை சாப்பிட்டால், வயிறு நிறைந்த உணர்வை கொடுப்பதுடன், தூக்கத்தை சீர்குலைக்காமலும் பார்த்துக் கொள்கின்றது.
தினமும் நள்ளிரவில் பசி ஏற்படுகின்றது என்றால், தூங்க செல்வதற்கு முன்பு வேகவைத்த முட்டையை சாப்பிடுவது சிறந்ததாகும். முட்டையில் கார்போஹைட்ரேட் குறைவாக இருந்தால், இதில் நல்ல கொழுப்பு மற்றும் புரதம் அதிகமாகவே இருக்கின்றது. இவை சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கின்றது.
மேலும் பாசிப்பயறு சூப் மற்றும் பனீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். பாசிப்பயறு சூப்பில் சிறிதளவு நெய், சீரகம், பெருங்காயம் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம். சூப்பை வெதுவெதுப்பான சூட்டில் குடிக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |