பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்களுக்கு வந்த சோகமான செய்தி
வெள்ளித்திரை படங்களை காட்டிலும் சின்னத்திரை சீரியல்களுக்கு என்றுமே ரசிகர்கள் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம்.
நகரம் முதல் கிராமத்தின் மூலைமுடுக்கு வரை வீட்டில் ஒருவராகவே வாழ்ந்து வருகின்றனர் சின்னத்திரை நட்சத்திரங்கள்.
அதிலும் குறிப்பாக சில சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அதிக வரவேற்பு அளிக்கின்றனர். சின்னத்திரையில் மக்கள் அதிகம் ரசிக்கும் சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த வாரத்திற்கான (மே 8 முதல் 14ம் தேதி வரை) டிஆர்பி ரேட்டிங் விபரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

முதன் மூன்று இடங்களை சன் டிவி கைப்பற்றியுள்ளது, பிகில் திரைப்படம் முதலிடமும், 2ம் இடத்தில் ரோஜா சீரியலும், 3ம் இடத்தில் வானத்தைப்போல சீரியலும் உள்ளன.
4வது இடத்துக்கு பாரதி கண்ணம்மா தள்ளப்பட்டுள்ளது, இதற்கு முந்தைய வாரத்துக்கான பட்டியலில் 5வது இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பட்டியலிலேயே இல்லை.
தற்போது 5வது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
