இது கூடவா தெரியல.. இலங்கை மக்களை வைத்து செய்த தொகுப்பாளர்
"நீங்கள் சந்திக்க நினைக்கும் பிரபலத்தின் பெயர்? " என்ற கேள்வியுடன் தொகுப்பாளர் ஒருவர் இலங்கை - கொழும்பு பகுதியிலுள்ள மக்களை சந்தித்துள்ளார்.
இந்த கேள்விக்கு அங்கிருந்த மக்கள் அளித்த பதில் பார்க்கும் போது இணையவாசிகளை மிரள வைத்துள்ளது.
அதில், விஜய் விட அஜித் தான் வித்தியாசம் வித்தியாசமாக நடிக்கிறார் என்றும் அவரை தான் நான் நேரில் காண வேண்டும் என்றும் நபரொருவர் பேசியிருந்தார்.
பின்னர் மற்றுமொருவர் பாடகர் ஹரிகரனை எனக்கு மிகவும் பிடிக்கும் அவரின் பாடல்கள் தான் வீட்டில் அடிக்கடி கேட்பேன் என்று கூறிவிட்டு பாடல் வரிகள் தெரியாமல் முனுமுனுத்து சென்றுள்ளார்.
இப்படியான சில சம்பவங்களை பார்க்கும் போது “இது கூடவா தெரியல..”என தொகுப்பாளரையே சிந்திக்க வைக்கின்றது. இது போன்ற பல சுவாரஸ்யங்களை கீழுள்ள காணொளியில் பார்க்கலாம்.