லட்சுமி தேவியின் அருளை இழக்கச் செய்யும் 4 தவறுகள்! எச்சரிக்கும் சாணக்கிய நீதி
பண்டைய இந்தியாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், சிறந்த அரசியல் ஆலோசகரும், ராஜதந்திரியுமான ஆச்சார்ய சாணக்கியர், தனது 'சாணக்கிய நீதி' என்ற நூலில் வாழ்க்கை நெறிமுறைகள், செல்வ மேலாண்மை மற்றும் வெற்றிக்கான பல முக்கிய கருத்துகளை குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, செல்வம் மற்றும் வளமான வாழ்க்கையைப் பேணுவதற்கான ஒழுக்கங்களையும், மனிதர்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கவழக்கங்களையும் அவர் வலியுறுத்துகிறார்.

சாணக்கியரின் கருத்துப்படி, சிலர் அறியாமலோ அல்லது அலட்சியத்தாலோ செய்யும் தவறான செயல்கள், செல்வத்தின் அதிபதியாகக் கருதப்படும் லட்சுமி தேவியின் அருளை இழக்கச் செய்யும் என்று கூறப்படுகிறது.
இதன் விளைவாக, வீட்டில் செல்வ வளம் குறைந்து, பொருளாதார நெருக்கடிகளும், வறுமையும் அதிகரிக்கத் தொடங்கும் என நம்பப்படுகிறது. அத்தகைய தவறுகளை தொடர்ந்து செய்பவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தாலும், அவர்கள் எதிர்பார்த்த அளவில் செல்வத்தையும் சொத்து வளத்தையும் அடைய முடியாமல் போகும்.

அந்தவகையில், சாணக்கிய நீதியின் பிரகாரம், இவ்வாறான பழக்கங்களை கடைப்பிடிக்கும் வீடுகளில் லட்சுமி தேவியின் அருள் கிடைக்காது என்பது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
செல்வத்தை தடுக்கும் முக்கிய தவறுகள்
ஆடம்பரச் செலவு: வருமானத்தை விட தேவையற்ற ஆடம்பரத்திற்காக அதிகம் செலவழிப்பது கடன் சுமையையும் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தும். எனவே, பணத்தை விவேகமாகச் செலவிட வேண்டும் என சாணக்கிய நீதி குறிப்பிடுகின்றது.

அசுத்தமான சமையலறை: குறிப்பாக இரவில் பாத்திரங்களை கழுவாமல் சமையலறையை அசுத்தமாக வைப்பது நல்லதல்ல இப்படிப்பட்ட வீடுகளில் பணத்தின் கடவுளாக கருதப்படும் லட்சுமி தேவியின் ஆசி துளியும் இருக்காது என சாணக்கியர் எச்சரிக்கின்றார்.
மாலை நேரத்தில் வீட்டை பெருக்குதல்: சூரியன் மறைந்த பிறகு வீட்டைப் பெருக்குவது அல்லது துடைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று இந்து மதத்திலும் குறிகப்பிடப்படுகின்றது. இந்த செயலால் வீட்டில் செல்லம் தங்காது என்பதை சாணக்கிய நீதியும் குறிப்பிடுகின்றது.

எப்போதும் சண்டை நிறைந்த வீடு: அடிக்கடி சண்டை, சச்சரவு நிலவும் வீட்டில் அமைதியும் செழிப்பும் ஒருபோதும் சிலைக்காது என்றும், இந்தகைய வீட்டில் தங்குவதற்கு லட்சுமி தேவி விரும்ப மாட்டார் என்றும் சாணக்கியர் எச்சரிக்கின்றார். வீட்டில் செல்வ செழிப்பு மற்றும் அமைதி நிலைக்க வேண்டும் என்றால் இந்த தவறுகளை செய்யவே கூடாது என சாணக்கிய நீதி வலியுறுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |