சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி யோகம்... இந்த 3 ராசிகளுக்கும் ஜாக்பாட் உறுதி!
ஜோதிட கணிப்புகளை பொருத்தவரையில் கிரக பெயர்ச்சிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் நேரடியான தொடர்பை கொண்டிருக்கும்.
அந்தவகையில், அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக அறியப்படும், அசுர்களின் குருவான சுக்கிர பகவான் தற்போது கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் மாத ஆரம்பத்தில் சுக்கிரன் தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இப்படி சுக்கிரன் மீன ராசியில் நுழைவதால் மங்களகரமான லட்சுமி யோகம் உருவாகவாகப்போகின்றது.
குறித்த இணைப்பின் தாக்கமானது 12 ராசிகளிலும் பிரதிபலித்தாலும், பஞ்சமகா புருஷ ராஜயோகங்களில் ஒன்றான லட்சுமி யோகத்தால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சுக்கிரனால் குறித்த லட்சுமி யோகம் உருவாகவுள்ளதால் இந்த ராசியினர் வாழ்வில் லட்சுமி தேவியின் முழுமையான ஆசியும் சுக்கிரனின் ஆசியும் இணைந்து கிடைப்பதால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி ஏற்படும்.
நீண்ட காலமாக இருந்துவந்த கடன் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர்கள் எதிர்ப்பார பணவரவால் மகிழ்ச்சி உண்டாகும். மனநிலையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாகும். இதனால் புதிய விடயங்களை கற்றுக்கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
தொழில் ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் கூடிவரும்.
மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் லட்சுமி யோகம் உருவாகவுள்ளதால் இவர்களின் வாழ்க்கையில் நீண்ட காலம் இருந்து வந்த பொருளாதார பிரச்சினைகள் நீங்கி, செல்வ செழிப்பு அதிகரிக்கம்.
பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைப்பதால் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். மாணவர்களிக் கல்வி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
புதிய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். லட்சுமி தேவியின் ஆசியால் பல வழிகளில் இருந்தும் வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் அமையும். பணவரவுக்கு பஞ்சமே இருக்காது.
கடகம்

கடக ராசியின் 9 ஆவது வீட்டில் குறித்த லட்சுமி யோகம் உருவாகவுள்ளதால், இவர்களின் வாழ்வில் எதிர்ப்பார நல்ல திருப்பங்கள் உருவாகும். நிதி நிலையில் இதுவரையில் இல்லாத அளவுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான யோகம் அமையும்.
சுக்கிரன் மற்றும் லட்சமியின் அருளார் வாழ்வில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். மொத்தத்தில் இந்த ராசியினர் வாழ்வில் பொற்காலம் ஆரம்பமாகப்போகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |