பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குவதற்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் வாங்கிய சம்பளம் குறித்த விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் தற்போது 10வது சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 50 நாட்களைக் கடந்து செல்லும் இந்த ரியாலிட்டி நிகழ்ச்சியினை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகின்றார்.
ஆரம்பத்தில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக விஜய் சேதுபதிக்கு தொண்டை பிரச்சனை காணப்பட்டது. ஆனாலும் அதனுடன் 3 வாரங்கள் தொகுப்பாளராக வந்த நிலையில், கடந்த வாரத்தில் கடுமையாக தொண்டை பிரச்சனையால் அவருக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.

ரம்யா கிருஷ்ணனின் கம்பீரமான பேச்சினால், போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் பயங்கர குஷியில் காணப்பட்டனர். விஜய் சேதுபதிக்கு பதிலாக இவரே இனி இருக்கட்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்கு வாங்கியுள்ள சம்பளம் குறித்த விபரம் வெளியாகியுள்ளது. அதாவது படங்களில் நடிப்பதற்கு ரம்யா கிருஷ்ணன் பல லட்சங்கள் சம்பளம் வாங்குகின்றார்.
ஒரு எபிசோடுக்கு சுமார் 15 லட்சம் வீதம் இரண்டு நாட்களுக்கு ரூ.30 லட்சம் சம்பளமாக பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |