இளையராஜா வீட்டிற்கு சென்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் நிலை! புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த நெட்டிசன்
இசைஞானி இளையராஜா வீட்டில் ரம்யாகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருந்த புகைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணன்
தமிழில் பல படங்களில் நடித்து பன் முகங்களுடன் வலம் வரும் லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்வதெல்லாம் உண்மை என்கிற ரியாலிட்டி ஷோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இவர் இயக்கத்தில் இதுவரை ஆரோகணம், நெருங்கிவா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் ஆகிய படங்கள் வெளியாகி உள்ளன. இதில் குறிப்பாக அவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்று குவித்தது.
இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் இசைப் பணிகளுக்காக இசைஞானி இளையராஜாவை சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
கோபமடைந்த நெட்டிசன்கள்
அந்த புகைப்படத்தில் இளையாராஜா முன் லட்சுமி ராமகிருஷ்ணன் தரையில் அமர்ந்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கோபமடைந்தனர்.
ஏன் இளையராஜாவிடம் சேர் வாங்க கூட காசில்லையா என ஒருவர் கேட்க, மற்றொருவர் அவங்களுக்கு சேர் கொடுத்தா கொறஞ்சி போயிடுவாரு, சக மனிதர்களுக்கு மதிப்பளிக்க தெரியாத மனிதன் இளையராஜா என்று விமர்சித்து பதிவிட்டனர்.
இதைப்பார்த்த லட்சுமி ராமகிருஷ்ணன், இளையராஜா கடவுளுக்கு நிகரானவர், அவர் காலடியில் அமர்ந்திருப்பதை நான் பாக்யமாக கருதுகிறேன். மேலும் தரையில் அமர்வது உடலுக்கு நல்லது. அதனை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.