சர்ச்சையில் சிக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்! திருமண நாளில் இது தேவையா? கொதித்தெழுந்த ரசிகர்கள்
லட்சுமி ராமகிருஷ்ணன் திருமண நாளில் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.
லட்சுமி ராமகிருஷ்ணன் பிப்ரவரி 14ம் திகதி யூட்யூப் சேனலில் திருமண ஆண்டு விழா – 2022 க்கான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் அவர், தன்னுடைய கணவருடன் நேரத்தை செலவிடுவதுவையும், கார் சவாரி மற்றும் கடற்கரை செல்வது போன்ற அழகிய தருணங்களை பதிவிட்டிருந்தார்.
பின் அவர் திருமணம் மற்றும் கணவர் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்திருக்கிறார்.
இப்படி இவர் பதிவிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து இதற்கு பலரும் நெகட்டிவ் கமெண்டுகளை போட ஆரம்பித்திருக்கிறார்கள்.
அந்த வீடியோவில் இவர் பொட்டு வைக்காமல் இருப்பதை கவனித்து அதைப் பற்றி கருத்து போட்டு வருகின்றனர்.
குங்கும பொட்டு வைக்காமல் போறீங்களே திருமணநாள் கொண்டாடுற லட்சணம் இது தானா என்று நெட்டிசன்கள் விமர்சித்து கமெண்ட் போட்டு இருக்கிறார்கள்.
எனினும், இந்த ஜோடியை அவரது ரசிகர்கள் நீடூழி வாழ வாழ்த்தி வருகின்றனர்.

