சொந்த ராசியில் அஸ்தமனமாகும் சுக்கிரன்: இந்த ராசிகளுக்கு யோகம் காத்திருக்குது!
நவகிரகங்களில் செல்வாக்குமிக்க கிரகமாகக் கருதப்படும் சுக்கிரன், ஜோதிடத்தில் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் மற்றும் திருமண வாழ்க்கையை குறிக்கிறார்.
எனவே, சுக்கிரனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஜோதிடத்தில் முக்கியத்துவம் பெறுகின்றன. ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் செல்லும்போது அஸ்தமன நிலையை அடைகிறது.ஜோதிடத்தில் இது ‘கிரக அஸ்தமனம்’ எனப்படுகிறது.

அந்த வகையில், அக்டோபர் 12, 2026 அன்று சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாமில் நுழைந்து அஸ்தமன நிலையை அடைகிறார். சுக்கிரன் தனது சொந்த ராசியிலேயே அஸ்தமனமாவது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடம் கூறுகிறது.
இருப்பினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் சிறப்பான பலன்களைத் தரம் என கணிக்கப்பட்டுள்ளது.அப்படி சுக்கிரன் அஸ்தமனத்தால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலக்களை பெறப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்

சுக்கிரனின் அஸ்தமனம் மீன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வாழ்க்கையில் நிதி ஆதாயங்களும், தொழிலில் வெற்றியும் கிடைக்க வாய்ப்புள்ளது.
தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும், நேர்மறையான சூழலும் நிலவும்.
மாணவர்கள் செல்வாக்கு மிக்க ஒருவரின் ஆதரவைப் பெற்று, படிப்பில் சரியான வழிகாட்டுதலைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கையில் அமைதியும் நல்லிணக்கமும் இருக்கும். ஆரோக்கியத்திலும் பெரிய பிரச்சினைகள் ஏற்படாது.
தனுசு

சுக்கிரனின் அஸ்தமனம் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். சரியான முடிவுகளை எடுத்து வாழ்க்கையில் முன்னேறுவார்கள். கடின உழைப்பாலும் ஆர்வத்தாலும் நல்ல பெயரைப் பெறுவார்கள்.
தொழிலில் லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தை பல்வேறு திசைகளில் விரிவுபடுத்தும் வாய்ப்பும் கிடைக்கும். பொருளாதார பிரச்சினைகளால் தடைப்பட்டிருந்த பணிகள் நிறைவேறும்.
அதிர்ஷ்டம் சாதகமாக இருப்பதால் தனிப்பட்ட வாழ்க்கையிலும் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பல்வேறு துறைகளில் நினைத்ததை சாதிக்க முடியும். தொடங்கிய திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
சிம்மம்

சுக்கிரனின் அஸ்தமனம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை வழங்கும். பல்வேறு பணிகளை சரியான நேரத்தில் முடிக்க தேவையான ஆற்றல் கிடைக்கும்.
இதன் மூலம் பாராட்டுகளும் கிடைக்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
குடும்பத்தில் ஸ்திரத்தன்மை நிலவும். துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவார்கள். உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். மனநிலையும் ஆரோக்கியமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |