இரவு முழுவதும் தூங்கினாலும் காலையில் களைப்பாக இருந்தால் நோயா? இனி ஜாக்கிரதை
மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் தூக்கம் மிகவும் அவசியம். ஒரு மனிதர் குறைந்தது ஒரு நாளைக்கு 6 மணிநேரம் சரி நிம்மதியாக தூங்க வேண்டும்.
அப்படி தூங்கும் பொழுது உடலில் உள்ள ஏனைய செயன்முறைகள் சீராக நடக்கும்.
சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என மருந்துவில்லைகளை எடுத்துக் கொண்டு இரவு வேளைகளில் தூங்காமல் வேலைச் செய்வார்கள். ஆனால் ஒருவர் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்கும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
இரவு என்ன தான் தூங்கினாலும் காலையில் எழும் பொழுது களைப்பாக இருக்கிறது என்றால் அது சாதாரண விடயமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
அந்த வகையில், 8 மணி நேரம் தூங்கியும் உடல் ஏன் களைப்பாக உள்ளது? என்பதை பதிவில் பார்க்கலாம்.
புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் (prostate) புற்றுநோய், சில வகை ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் இந்த களைப்பு காலையில் ஏற்படும்.
நீரிழிவு நோய்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக அல்லது குறைவாக இருப்பின், அது உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்காமல் இருக்கும். இதன் விளைவாக தாகம்,அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோயாளிகள் காலையில் எழுந்தவுடன் களைப்பாக உணர்வார்கள்.
தடுப்புச்சக்தி ஏற்படுத்தும் நோய்கள் (autoimmune diseases)
தடுப்புச் சக்தி ஏற்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்கள் எப்போதும் சோர்வாக இருப்பார்கள்.
தூக்கமின்மை, மனநல பாதிப்பு
மனச்சோர்வு, தூக்கமின்மை ஆகிய பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் போதியளவு தூக்கம் இல்லாமல் காலையிலும் சோர்வாக இருப்பார்கள்.
மருத்துவர் பரிந்துரை
- 2 முதல் 4 வாரங்களுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம், இரவு நன்றாக உறங்கும் வழக்கம் ஆகியவற்றை சரியாக செய்யும் பொழுதும் உங்களுக்கு களைப்பு குறையாமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
- நாளாந்தம் நாம் செய்யும் வேலைகளை கூட சரியாக செய்யமுடியவில்லை என்றாலும், உடல்நலக்குறை உள்ளவர்களும் தீராத களைப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |