16 வயது அழகியாக மாறிய குஷ்பு! ரசிகர்களை வாய்பிளக்க வைத்த அந்த புகைப்படம் இதோ
அரசியல், சினிமா என எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாத பிரபலம் குஷ்பு, கொழு கொழுவென அழகாக வலம் வந்த குஷ்பு திடீரென எடையை குறைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தினார்.
குஷ்புக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்
90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் குஷ்பு, குஷ்புக்கு இன்றளவும் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.
இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் இருந்தனர், சினிமாவில் இருந்த போதே இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
தற்போது வரை வெள்ளித்திரை, சின்னத்திரை, அரசியல் என பரபரப்பாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
எடையை குறைத்தது எப்படி?
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைந்த வைத்தது என்றால் அது மிகையாகாது.
ஆம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்தில் காணப்பட்டார், இன்றைய கதாநாயாகிகளுடன் போட்டிபோடும் அளவுக்கு அழகு தேவதையாய் ஜொலிக்கிறார்.
இதற்கு காரணம், தினமும் குறைந்தது 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தது தான் என்ற ரகசியத்தை பகிர்ந்து கொண்டார் குஷ்பு.
இந்நிலையில் தற்போது இன்ஸ்டாவில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை இன்னும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது.
”அப்பாடா இப்போ தான் உங்களுக்கு 16 வயதாகிறது” ” என்ன அழகு” என வர்ணிக்க தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.